சையத் முஷ்டாக் அலி உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற குரூப் சி அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியில் அருணாச்சல பிரதேஷ் மற்றும் ஜார்கண்ட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற அருணாச்சல பிரதேஷ அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

Advertisement

இதையடுத்து களமிறங்கிய அருணாச்சல பிரதேஷ அணியின் பேட்டர்கள் எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். அதிலும் குறிப்பாக அந்த அணியைச் சேர்ந்த எந்தவொரு பேட்டாரும் 20 ரன்களைத் தாண்டவில்லை. மேலும் அருணாச்சல பிரதேஷ அணியில் அதிகபட்சமாக அக்‌ஷய் ஜெய்ன் 14 ரன்களையும், டெசி டோரியா 13 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். 

Advertisement

இதனால் அருணாச்சல பிரதேஷ அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 93 ரன்களில் ஆல் அவுட்டானது. ஜார்கண்ட் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய அன்குல் ராய் 4 விக்கெட்டுகளையும், ரவி குமார் யாதவ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதைத்தொடர்ந்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய ஜார்கண்ட் அணிக்கு கேப்டன் இஷான் கிஷான் - உத்கர்ஷ் சிங் இணை தொடக்கம் கொடுத்தனர். 

இருவரும் இணைந்து தொடக்கம் முதலே பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் பறக்கவிட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இப்போட்டில் அபாரமாக விளையாடிய இஷான் கிஷன் அரைசதம் கடந்து அசத்தியதுடன் 23 பந்துகளில் 5 பவுண்டரி, 9 சிக்ஸர்களை விளாசி 77 ரன்களையும், உத்கர்ஷ் சிங் 13 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் ஜார்கண்ட் அணி 4.3 ஓவர்களில் இலக்கை எட்டி அசத்தியது. 

மேலும் இப்போட்டியில் அபாரமாக ஆட்டத்தை வெளிப்படுத்திய இஷான் கிஷான் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்தாண்டு தொடக்கத்தில் பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட இஷான் கிஷன் அதன்பின் இந்திய அணியில் இடம்பிடிக்க முடியாமல் தடுமாறி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரூ.11.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News