விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற இரண்டாவது சுற்று ஆட்டத்தில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள மணிப்பூர் - ஜார்கண்ட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஜெய்ப்பூரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மணிப்பூர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு கர்ணஜித் யும்னம் - பசீர் ரஹ்மான் உள்ளிட்டோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 55 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். அதன்பின் 24 ரன்களை எடுத்திருந்த நிலையில் கர்ணஜித் யும்னம் விக்கெட்டி இழக்க, அவரைத்தொடர்ந்து பசீம் ரஹ்மான் 26 ரன்னிலும் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த பிரயோஜித் சிங் மற்றும் ஜான்சன சிங் இணை  பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென ஸ்கோரை உயர்த்தினர். 

Advertisement

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜான்சன் சிங் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். இதன்மூலம் இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டிற்கு 90 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட பிரயோஜித் சிங் 43 ரன்னில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஆனந்த் 8 ரன்னிலும், 69 ரன்கள் எடுத்திருந்த ஜான்சன் சிங்கும் விக்கெட்டுகளை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஃபைரோய்ஜாம் ஜோதின் 35 ரன்களைச் சேர்த்தார். 

இதன்மூலம் மணிப்பூர் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 253 ரன்களைச் சேர்த்தது. ஜார்கண்ட் தரப்பில் அன்குல் ராய் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய ஜார்கண்ட் அணிக்கு கேப்டன் இஷன் கிஷான் - உத்கர்ஷ் சிங் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். இதில் இருவரும் தங்கள் அரைசதங்களைப் பதிவுசெய்து அசத்தினர். இப்போட்டியில் தொடர்ந்து அபாரமாக விளையாடிய இஷான் கிஷான் தனது சதத்தைப் பதிவுசெய்தார்.

இதன்மூலம் இருவரும் முதல் விக்கெட்டிற்கு 196 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் 16 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 134 ரன்களைச் சேர்த்திருந்த இஷான் கிஷன் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் 68 ரன்களை எடுத்திருந்த நிலையில் உத்கர்ஷ் சிங்கும் தனது விக்கெட்டை இழக்க, இறுதியில் குமார் குஷாக்ரா 26 ரன்களையும், அன்குல் ராய் 17 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் ஜார்கண்ட் அணி 28.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் மணிப்பூர் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News