ஆஸ்திரேலிய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடர் ஜனவரி 29ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்றைய தினம் அறிவித்துள்ளது. இதில் வழக்கமான கேப்டன் பாட் கம்மின்ஸுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

இதன் காரணமாக இத்தொடரில் ஆஸ்திரேலிய அணியின் தற்காலிக கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் செயல்படவுள்ளார். மேற்கொண்டு இந்திய டெஸ்ட் தொடரின் போது காயமடைந்த வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட்டிற்கும் இந்த தொடரில் இடம்பிடிக்கவில்லை. அதேசமயம் இந்திய தொடரில் சோபிக்க தவறிய ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷுக்கும் இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் கிடைக்கவில்லை.

Advertisement

இருப்பினும் இந்த அணியில் ஆஸ்திரேலிய அணியின் இளம் வீரர் நாதன் மெக்ஸ்வீனி மீண்டும் இடம்பிடித்துள்ளார். அவருடன் அறிமுக வீரர் கூப்பர் கன்னொலி, மேத்யூ குஹ்னேமன் மற்றும் டாட் மர்பிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர்த்து பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாம் கொன்ஸ்டாஸ், பியூ வெப்ஸ்டர் ஆகியோருடன் சேர்த்து ஜோஷ் இங்லிஷும் தனது இடத்தை தக்கவைத்துள்ளார். 

இந்நிலையில் இத்தொடரில் ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஒரு ரன் அடிக்கும் பட்சத்தில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 10ஆயிரம் ரன்கள் என்ற மைல் கல்லை எட்டவுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “புள்ளிவிவரங்கள் மற்றும் அதனைச் சாந்த விஷயங்களைப் பற்றி நான் அதிகம் சிந்திப்பதில்லை. ஆனால், 10,000 ரன்கள் என்பது கொஞ்சம் வித்தியாசமானது. உண்மை சொல்ல வேண்டும் எனில் அது தற்போது எனது மனதில் ஓடிக்கொண்டிருக்கும் விஷயம் அது. 

பொதுவாக நான் அந்த விஷயங்களைப் பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை, ஆனால் விளையாட்டுக்கு முன்பு, எனது அந்த இலக்கு குறித்து ஊடங்களில் பல்வேறு செய்திகள் வருவதை பார்க்க நேரிடுகிறது. உண்மையைச் சொன்னால், நான் விளையாடும் போது விளையாட்டை விடவும் அதுதான் என் மனதில் அதிகம் ஓடிக்கொண்டிருந்தது. அதிர்ஷ்டவசமாக, இறுதியில் அந்த ஆட்டத்தில் நாங்கள் வெற்றி பெற்றோம், அதனால் அது உண்மையில் ஒரு பொருட்டல்ல” என்று தெரிவித்துள்ளார். 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

இதுவரை ஆஸ்திரேலிய அணிக்காக 114 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 204 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள ஸ்டீவ் ஸ்மித் 53.55 என்ற சராசரியில் 9999 ரன்களைச் சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் இத்தொடரில் 10ஆயிரம் ரனகளை கடக்கும் பட்சத்தில் இந்த மைல் கல்லை எட்டிய 4ஆவது ஆஸ்திரேலிய வீரர் எனும் பெருமையை பெறுவார். இதற்கு முன் ஆஸ்திரேலியாவுக்காக ரிக்கி பாண்டிங் (13378 ரன்கள்), ஆலன் பார்டர் (11174 ரன்கள்), ஸ்டீவ் வாக் (10927) ஆகியோர் மட்டுமே இதனை செய்துள்ளனர். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News