இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 1-0 என்ற கணக்கில் தொடரின் ஆரம்பத்திலேயே முன்னிலையைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது.

Advertisement

இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில், இந்திய அணிக்கெதிரான முதல் போட்டியின் போது இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜேக் லீக் காயமடைந்தார். இப்போட்டியின் முதல் இன்னிங்ஸின் போது காயமடைந்த இவர், காயத்துடனே இரண்டாவது இன்னிங்ஸிலும் பந்துவீசிய அவர் ஸ்ரேயாஸ் ஐயரின் விக்கெட்டை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவினார். 

Advertisement

இந்நிலையில் காயத்திலிருந்து முழுவதுமாக குணமடையாத அவர், இந்திய அணிக்கெதிரான இரண்டாவது போட்டியில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் இரண்டாவது போட்டிக்கான இங்கிலாந்து அணியில் அறிமுக வீரர் சோயப் பஷீர் அணியில் சேர்க்கப்படுவார் என்ற கூறப்படுகிறது. முன்னதாக விசா பிரச்சனை காரணமாக நாடு திரும்பிய அவர், தற்போது மீண்டும் இங்கிலாந்து அணியில் இணைந்துள்ளார்.

மேலும் இங்கிலாந்து அணிக்காக அறிமுகமாகவுள்ள சோயப் பஷீர் இதுவரை 6 முதல் தர போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். இருப்பினும், ஐக்கிய அரபு அமீரகத்தில் பயிற்சியை மேற்கொண்டிருந்த போது அவரது பந்துவீச்சு அபாரமாக இருந்ததாகவும், அவரால் இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றும் இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News