ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெறவுள்ளன. இந்த உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டி அக்டோபர் 5ஆம் தேதி குஜராத் அகமதாபாத் மைதானத்தில் இங்கிலாந்து நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடக்கிறது. இறுதிப் போட்டி இதே மைதானத்தில் நவம்பர் 19ஆம் தேதி நடக்கிறது.

Advertisement

இந்தத் தொடர் மொத்தம் பத்து அணிகளைக் கொண்டு நடத்தப்படுகிறது. இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய எட்டு அணிகள் நேரடியாக தகுதி பெற்றன. மீதி இரண்டு இடங்களுக்கான அணிகள் உலகக் கோப்பை தகுதிச்சுற்று போட்டிகள் மூலம் தகுதிப்பெற்றன. அதிர்ச்சி அளிக்கும் விதமாக வெஸ்ட் இண்டீஸ் அணி உலகக் கோப்பையில் இருந்து வெளியேற, இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் தகுதி பெற்றன.

Advertisement

தற்பொழுது இந்த உலகக் கோப்பையில் விளையாட இருக்கும் 10 அணிகளும் அதற்காக சிறந்த முறையில் தயாராவதற்கு மும்முரமாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. உலகக் கோப்பைக்கு முன்பாக எல்லா அணிகளும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடுகின்றன. இந்த நிலையில் நடக்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் எந்த வீரர் அதிக ரன்கள் குவிப்பார் என்று, கிரிக்கெட் உலகில் என்றும் தலைசிறந்த வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் மற்றும் அதிசிறந்த பேட்ஸ்மேன் ஜாக் காலிஸ் தனது கணிப்பைக் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து பேசிய ஜாக் காலிஸ், “இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் முன்னணி ரன் ஸ்கோர் ஆக இருப்பார் என்று நான் நினைக்கிறேன். வெளியில் இருந்து இங்கிலாந்து அணி உடன் இந்த சூழ்நிலையில் அவர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று விரும்புகிறேன். அவர் தனித்து தெரியும் ஒரு வீரராக இருப்பார் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News