மெல்போர்னில் நடந்து வரும் ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 474 ரன்களையும், அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி 369 ரன்களையும் சேர்த்து ஆல் அவுட்டானது. 

Advertisement

அதன்பின் 105 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாம் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு சாம் கொன்ஸ்டாஸ் மற்றும் உஸ்மான் கவாஜா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் முதல் இன்னிங்ஸில் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்த சாம் கொன்ஸ்டாஸ் இந்த இன்னிங்ஸில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், ஆரம்பம் முதலே ரன்களை சேர்க்க முடியாமல் தடுமாறினார். 

Advertisement

அதன்பின் இந்த இன்னிங்ஸில் சாம் கோன்ஸ்டாஸ் 8 ரன்களை எடுத்திருந்த நிலையில் ஜஸ்பிரித் பும்ரா பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். முதல் இன்னிங்ஸில் பும்ராவுக்கு எதிராக மட்டும் 33 ரன்களை சாம் கொன்ஸ்டாஸ் குவித்திருந்த நிலையில், இந்த இன்னிங்ஸில் அதற்கு பும்ரா பழித்தீர்த்துக் கொண்டதுடன் விக்கெட்டை வீழ்த்திய கையோடு ஆக்ரோஷமாக கொண்டாடவும் தொடங்கினார். 

அதன்படி இன்னிங்ஸின் 7ஆவது ஓவரை பும்ரா வீசிய நிலையில், அந்த ஓவரின் மூன்றாவது பந்தை இன்ஸ்விங்கராக வீசினார். இதனை சரியாக கணிக்க தவறிய சாம் கொன்ஸ்டாஸ் பந்தை தடுத்து விளையாடிய முயற்சித்து பந்தை தவறவிட்டார். இதனால் பந்து அவரது தொடை பகுதியில் இருந்து பேடில் பட்டு மிடில் ஸ்டம்பை தாக்கியது. இந்நிலையில் ஜஸ்பிரித் பும்ரா பந்துவீச்சில் கொன்ஸ்டாஸ் க்ளீன் போல்டான காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

MIDDLE STUMP! Jasprit Bumrah gets Sam Konstas with a pearler. #AUSvIND | #DeliveredWithSpeed | @NBN_Australia pic.twitter.com/A1BzrcHJB8

— cricket.com.au (@cricketcomau) December 29, 2024

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

இதனைத்தொட்ர்ந்து மற்றொரு தொடக்க வீரரான உஸ்மான் கவாஜாவுடன் இணைந்துள்ள மார்னஸ் லபுஷாக்னே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து வருவததுடன், ஸ்கோரை உயர்த்து முயற்சியிலும் இறங்கியுள்ளார். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி தற்போது வரை ஒரு விக்கெட் இழப்பிற்கு 43 ரன்களைச் சேர்த்துள்ளது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 148 ரன்கள் முன்னிலையில் உள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News