Jasprit Bumrah Records: ஹெடிங்லே நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன் சில சாதனைகளையும் படைத்துள்ளார். 

Advertisement

ஹெடிங்லேவில் உள்ள லீட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் துணைக்கேப்டன் ரிஷப் பந்த் ஆகியோரது அபாரமான சதத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 471 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இங்கிலாந்து தரப்பில் ஸ்டோக்ஸ், டங்க் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

Advertisement

பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணியில் ஒல்லி போப் 106 ரன்களையும், ஹாரி புரூக் 99 ரன்களையும், பென் டக்கெட் 62 ரன்களையும் சேர்க்க அந்த அணி 465 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகளையும், பிரஷித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து 6 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்து வருகிறது. 

இந்நிலையில் ஜஸ்பிரித் பும்ரா இப்போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் சில சாதனைகளையும் படைத்துள்ளார். அதன்படி அவர் சேனா நாடுகளில் தனது 150 விக்கெட்டுகளை பூர்த்தி செய்துள்ளார். இதன்மூலம் சேனா நாடுகளில் 150 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் ஆசியர் எனும் சாதனையைப் படைத்துள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வாஷிம் அக்ரம் 146 விக்கெட்டுகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

சேனா நாடுகளில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய ஆசிய பந்து வீச்சாளர்கள்

  • ஜஸ்பிரித் பும்ரா - 150*
  • வாசிம் அக்ரம் - 146
  • அனில் கும்ப்ளே - 141
  • இஷாந்த் சர்மா - 130
  • முத்தையா முரளிதரன் - 125

இதுதவிர்த்து இப்போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் இந்தியாவிற்கு வெளியே நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் அதிகமுறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய வேகப்பந்து வீச்சளர்கள் பட்டியலில் முன்னாள் கேப்டன் கபில் தேவின் சாதனையை சமன்செய்துள்ளார். முன்னதாக கபில் தேவ் 12 முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றியதே சாதனையாக இருந்த நிலையில் தற்போது ஜஸ்பிரித் பும்ராவும் 12 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

Advertisement

வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்காக அதிக ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள்

  • 12 ஜஸ்பிரித் பும்ரா (34 டெஸ்ட்) *
  • 12 கபில் தேவ் (66)
  • 9 இஷாந்த் சர்மா (63)
  • 8 ஜாகீர் கான் (54)
  • 7 இர்பான் பதான் (15)

இங்கிலாந்து பிளேயிங் லெவன்: ஜாக் கிரௌலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஷ் டங்கு, ஷோயப் பஷீர்.

Also Read: LIVE Cricket Score

Advertisement

இந்தியா பிளேயிங் லெவன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்ஷன், ஷுப்மான் கில் (கேப்டன்), ரிஷப் பந்த், கருண் நாயர், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், பிரசித் கிருஷ்ணா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News