இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டவது ஒருநாள் போட்டி வதோதராவில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி தொடக்க வீராங்கனைகளாக ஸ்மிருதி மந்தனா- பிரதிகா ராவல் இணை களமிறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் கடந்ததுடன், முதல் விக்கெட்டுக்கு 110 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர்.

Advertisement

அதன்பின் ஸ்மிருதி மந்தனா 53 ரன்னிலும், பிரதிகா ராவல் 76 ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஹர்லீன் தியோல் சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவுசெய்ததுடன் 115 ரன்களையும், அவருடன் இணைந்து விளையாடிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் 52 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 358 ரன்க சேர்த்தது. 

Advertisement

இதையடுத்து, கடின இலககி நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க வீராங்கனை மற்றும் கேப்டன் ஹீலி மேத்யூஸ் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார்.  இப்போட்டியில் அவர் 106 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்த நிலையில், அந்த அணியில் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோராக ஷமைன் கேம்ப்பெல் 38 ரன்களை சேர்த்தார். ஆனால் அவர்கள் இருவரைத் தவிர்த்து மற்ற வீராங்கனைகள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர்.

இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 46.2 ஓவரில் 243 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் சார்பில் பிரியா மிஸ்ரா 3 விக்கெட்டுகளையும், தீப்தி சர்மா, பிரதிகா ராவல், டிடாஸ் சாது ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன்மூலம் இந்திய அணி மகளிர் அணி 115 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் வென்றது.

இந்நிலையில் இப்போட்டியில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் பிடித்துள்ள ஒரு கேட்ச் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதன்படி இப்போட்டியில் அதிரடியாக விளையாடி சதமடித்து அசத்திய வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஹீலி மேத்யூஸ் 106 ரன்களைச் சேர்த்த நிலையில் பிரதிகா பந்துவீச்சில் மிட் ஆன் திசையில் சிக்ஸர் அடிக்க முயற்சித்து தூக்கி அடித்தார். அப்போது அவரால் எதிர்பார்த்த அளவில் அந்த ஷாட்டை முழுமையாக விளையாடமுடியவில்லை. 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

இதனால் பந்து போதிய தூரம் செல்லாத நிலையில், அத்திசையில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் பந்தை சரியாக கணித்து அபாரமான டைவை அடித்து அற்புதமான கேட்ச்சை எடுத்தார். இதனை சற்றும் எதிர்பாராத ஹீலி மேத்யூஸ் ஏமாற்றத்துடன் பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இந்நிலையில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News