நியூசிலாந்து- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி வெல்லிங்டனில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 280 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஹாரி புரூக் 123 ரன்களையும், ஒல்லி போப் 66 ரன்களையும் சேர்த்தனர். நியூசிலாந்து அணி சார்பில் நாதன் ஸ்மித் 4 விக்கெட்டுகளையும், வில்லியம் ஓ'ரூக்கே 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

Advertisement

பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணியானது அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததன் காரணமாக முதல்நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்களைச் சேர்த்தது. இதனையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்திலும் அந்த அணி ரன்களைச் சேர்க்க தவறியதால் முதல் இன்னிங்ஸில் 125 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இங்கிலாந்து தரப்பில் கஸ் அட்கின்சன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

Advertisement

அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியுள்ள இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 378 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் பென் டக்கெட் 92 ரன்களையும், ஜேக்கப் பெத்தெல் 96 ரன்னிலும், ஹாரி புரூக் 55 ரன்களுடனும் விக்கெட்டை இழக்க, ஜோ ரூட் 73 ரன்களுடன் களத்தில் உள்ளார். இதனையடுத்து 533 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி நாளை மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.

இந்நிலையில் இப்போட்டியில் ஜோ ரூட் அரைசதம் கட்ந்ததன் மூலம் இங்கிலாந்தின் 147 ஆண்டு டெஸ்ட் வரலாற்றில் எந்த வீரரும் செய்யாத சாதனையை படைத்துள்ளார்.  அதன்படி ச்ர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 அல்லது அதற்கு மேற்பட்ட 50+ அடித்த இங்கிலாந்தின் முதல் வீரர் மற்றும் உலகின் நான்காவது வீரர் என்ற பெருமையை ரூட் பெற்றுள்ளார். இந்தப் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் 119 ஐம்பது பிளஸ் ஸ்கோர்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

அதேசமயம் ஜாக் காலிஸ் மற்றும் ரிக்கி பாண்டிங் ஆகியோர் தலா 103 அரைசதங்களுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். இந்த பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் 99 அரைசதங்களை அடித்து நான்காம் இடத்தில் இருந்த நிலையில், அதனை தற்போது முறியடித்து ஜோ ரூட் நான்காம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

இது தவிர, டெஸ்டில் வெளிநாட்டு மண்ணில் அதிக ஐம்பது பிளஸ் ஸ்கோரை அடித்ததன் அடிப்படையில் தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வீரர் ஜாக் காலிஸை (46) பின்னுக்குத் தள்ளி ஜோ ரூட் ஆறாவது இடத்திற்கு வந்துள்ளார். இங்கிலாந்துக்கு வெளியே இந்த வடிவத்தில் அவர் அடித்த 47வது அரைசதம் இதுவாகும். அவரை விட சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், யூனிஸ் கான், அசார், மிஸ்பா உல் ஹக் ஆகியோர் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News