இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான் முதலாவது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நவம்பர் 28ஆம் தேதி தொடங்கியது. இப்போட்டியில்  டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து நியூசிலாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். 

Advertisement

அதன்படி முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 348 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. நியூசிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக கேன் வில்லியம்சன் 93 ரன்களையும், கிளென் பிலீப்ஸ் 58 ரன்களையும் சேர்த்தனர், இங்கிலந்து அணி தரப்பில் பிரைடன் கார்ஸ், சோயப் பஷீர் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். 

Advertisement

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி ஹாரி புரூக்கின் அதிரடி சதத்தின் மூலம் 499 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. இதில் அதிகபட்சமாக ஹாரி புரூக் 171 ரன்களும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 80 ரன்களையும் சேர்த்தனர். நியூசிலாந்து அணி தரப்பில் மேட் ஹென்றி 4 விக்கெட்டுகளையும், நாதன் ஸ்மித் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். மேலும் இங்கிலாந்து அணி 151 ரன்கள் முன்னிலையும் பெற்றது.

இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலந்து அணியில் டேரில் மிட்செல் 84 ரன்களையும், கேன் வில்லியம் 61 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் இரண்டாவது இன்னிங்ஸில் அந்த அணி 254 ரன்களை மட்டுமே எடுத்து, இங்கிலாந்து அணிக்கு 104 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது. இங்கிலாந்து தரப்பில் பிரைடன் கார்ஸ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி ஜேக்கப் பெத்தலின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் 12.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டியது. இதன்மூலம் இங்கிலந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியதுடன், இந்த டெஸ்ட் தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது. இப்போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய பிரைடன் கார்ஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

இந்நிலையில் இப்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஆட்டமிழக்காமல் இருந்த இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் 23 ரன்களைச் சேர்த்ததன் மூலம் தனித்துவ சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதன்படி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டின் 4ஆவது இன்னிங்ஸில் அதிக ரன்களைச் சேர்த்த வீரர் எனும் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை ஜோ ரூட் முறியடித்து புதிய சாதனை பாடைத்து அசத்தியுள்ளார். 

Advertisement

4ஆவது இன்னிங்ஸில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள்

  • ஜோ ரூட் (இங்கிலாந்து) - 1630 ரன்கள்
  • சச்சின் டெண்டுல்கர் (இந்தியா) - 1625 ரன்கள்
  • அலெய்ஸ்டர் குக் (இங்கிலாந்து) - 1611 ரன்கள்
  • கிரேம் ஸ்மித் (தென் ஆப்பிரிக்கா) - 1611 ரன்கள்
  • ஷிவ்நரைன் சந்தர்பால் (வெஸ்ட் இண்டீஸ்) - 1580 ரன்கள்

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News