நியூசிலாந்து - இங்கிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி வெல்லிங்டனில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 280 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஹாரி புரூக் 123 ரன்களையும், ஒல்லி போப் 66 ரன்களையும் சேர்த்தனர். நியூசிலாந்து அணி சார்பில் நாதன் ஸ்மித் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Advertisement

பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணியானது அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததன் காரணமாக முதல்நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்களைச் சேர்த்தது. இதனையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்திலும் அந்த அணி ரன்களைச் சேர்க்க தவறியதால் முதல் இன்னிங்ஸில் 125 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இங்கிலாந்து தரப்பில் கஸ் அட்கின்சன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

Advertisement

இதையடுத்து, 155 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் களமிறங்கியது. பென் டக்கெட் 92 ரன்னும், பெத்தேல் 96 ரன்னும் எடுத்தனர். ஹாரி புரூக் 55 ரன்னில் வெளியேறினார். இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய  ஜோ ரூட் சதமடித்து அசத்தினார். இது இவரது 36வது சதமாகும். ஜோ ரூட் 106 ரன்னில் அவுட்டானார். இறுதியில், இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டு இழப்பிற்கு 427 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 49 ரன்களைச் சேர்த்தார். நியூசிலாந்து அணி தரப்பில் டிம் சௌதீ மற்றும் மேட் ஹென்றி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து, 583 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 259 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் இங்கிலாந்து அணி 323 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

இந்நிலையில் இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோ ரூட் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 36ஆவது சதத்தை பதிவுசெய்து அசத்தினார். அதிலும் அவர் இந்த போட்டியில் 98 ரன்களை எடுத்திருந்த போது வில்லியம் ஓ ரூக் பந்துவீச்சில் ஸ்கூப் ஷாட் மூலம் பவுண்டரி அடித்து தனது சதத்தை பூர்த்தி செய்திருந்தார். இந்நிலையில் ஜோ ரூட் விளையாடிய இந்த ஷாட் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News