ENG vs SL, 1st Test: டிராவிட், சந்தர்பால் சாதனைகளை தகர்த்த ஜோ ரூட்!

Updated: Sun, Aug 25 2024 13:11 IST
Image Source: Google

இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 236 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணியில் ஜேமி ஸ்மித் சதமடித்து அசத்த அந்த அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. 

பின்னர் 122 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணியில் கமிந்து மென்டிஸ் சதம் விளாசினார். அவருக்கு துணையாக தினேஷ் சண்டிமால் சண்டிமால் மற்றும் ஏஞ்சலோ மேத்யூஸ் ஆகியோர் அரை சதம் கடக்க, அந்த அணி 326 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. மேலும் இங்கிலாந்து அணிக்கு 205 ரன்களையும் இலக்காக நிர்ணயித்தது. 

பின்னர் இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி 57.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்களை எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து சார்பில் ஜோ ரூட் 62 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலைபெற்றுள்ளது. மேலும் இப்போட்டியின் ஆட்டநாயகன் விருதை இங்கிலாந்தின் ஜேமி ஸ்மித் கைப்பற்றினார்.

இந்நிலையில் இப்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் அரைசதம் கடந்ததன் மூலம் ராகுல் டிராவிஸ்ட், ஆலன் பார்டர் ஆகியோரது சாதனைகளை முறியடித்து அசத்தியுள்ளார். அதன்படி, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக அரைசதங்கள் விளாசிய வீரர்கள் பட்டையலில் 64 அரைசதங்களை குவித்து ஜோ ரூட் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். முன்னதாக இந்தியாவின் ராகுல் டிராவிட், ஆஸ்திரேலியாவின் ஆலன் பார்டர் ஆகியோர் தலா 63 அரைசதங்களுடன் மூன்றாம் இடத்தில் இருந்தனர்.

அதிக டெஸ்ட் அரைசதங்கள் அடித்த வீரர்கள்

  • சச்சின் டெண்டுல்கர் - 68 
  • ஷிவ்நரைன் சந்தர்பால் - 66
  • ஜோ ரூட் - 64
  • ராகுல் டிராவிட்  - 63
  • ஆலன் பார்டர் -63 

அதுமட்டுமில்லாமல் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் நான்காவது இன்னிங்ஸில் அதிக ரன்களைச் சேர்த்த வீரர் பட்டியலிலும் ஜோ ரூட் 4ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளதுடன், ராகுல் டிராவிட், ஷிவ்நரைன் சந்தர்பால் ஆகியோரது சாதனையை முறியடித்து அசத்தியுள்ளார். அதன்படி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் நான்காவது இன்னிங்ஸில் அதிக ரன்களை அடித்த வீரர்கள் வரிசையில் 1,589 ரன்களுடன் ஜோ ரூட் 4ஆம் இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

டெஸ்ட் போட்டியின் 4வது இன்னிங்ஸில் அதிக ரன்கள்

  • 1625 - சச்சின் டெண்டுல்கர்
  • 1611 - அலெஸ்டர் குக்
  • 1611 - கிரேம் ஸ்மித்
  • 1589 - ஜோ ரூட்*
  • 1580 - ஷிவ்நரைன் சந்தர்பால்
  • 1575 - ராகுல் டிராவிட்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை