வெஸ்ட் இண்டீஸ் அணியானது தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது நேற்று ( ஜூலை 18) நாட்டிங்ஹாமில் உள்ள டிரெண்ட் பிரிட்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

Advertisement

இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியானது ஒல்லி போப், பென் டக்கெட், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தாலும் 416 ரன்களைக் குவித்து வலிமையான தொடக்கத்தை பெற்றுள்ளது. இதில் அதிகபட்சமாக ஒல்லி போப் 121 ரன்களையும், பென் டக்கெட் 71 ரன்களையும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 69 ரன்களையும் குவித்தனர். 

Advertisement

வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய அல்ஸாரி ஜோசப் 3 விக்கெட்டுகளையும், ஜெய்டன் சீல்ஸ், கெவின் சிக்ளெர், கெவம் ஹாட்ஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதன்மூலம் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து நாளை தொடங்கும் இரண்டாம் நாள் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி தங்கள் முதல் இன்னிங்ஸை தொடரவுள்ளது.

இந்நிலையில் இப்போட்டியில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் 14 ரன்களை மட்டுமே சேர்த்து விக்கெட்டை இழந்தாலும், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் மஹிலா ஜெயவர்த்னேவின் வாழ்நாள் சாதனையை முறியடித்து அசத்தியுள்ளார். அந்தவகையில் இப்போட்டியில் 14 ரன்கள் எடுத்த நிலையில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த 9ஆவது வீரர் எனும் சாதனையை ஜோ ரூட் படைத்துள்ளார். 

முன்னதாக இலங்கை ஜாம்பவான் மஹிலா ஜெயவர்த்னே சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 11, 814 ரன்களைக் குவித்து 9ஆம் இடத்தில் இருந்த நிலையில், தற்போது இங்கிலாந்தின் ஜோ ரூட் 11, 818 ரன்களை குவித்து 9ஆம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் இதுவரை 142 டெஸ்ட் போட்டிகளில் 259 இன்னிங்ஸ்களில் 49.65 என்ற சராசரியில் 62 அரைசதங்கள், 31 சதங்கள் என 11,818 ரன்களைச் சேர்த்துள்ளார். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News