இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரை பின் பற்றி உலகின் பல்வேறு நாடுகளும் டி20 பிரீமியர் லீக் தொடர்களை நடத்தி வருகின்றனர். அதில் ஆஸ்திரேலியாவின் பிக் பேஷ், வெஸ்ட் இண்டீஸின் கரீபியன் பிரீமியர் லீக், பாகிஸ்தானின் பாகிஸ்தான் சூப்பர் லீக், வங்கதேசத்தின் பங்களதேஷ் பிரீமியர் லீக், இலங்கையின் லங்கா பிரீமியர் லீக் என ஒவ்வொரு நாடும் தங்களுக்கென தனி டி20 தொடர்களை நடத்தி வருகின்றனர். 

Advertisement

அந்தவகையில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியமும் கடந்தாண்டு முதல் எஸ்ஏ20 லீக் தொடரை நடத்தி வருகிறது. தற்போதுவரை இரண்டு சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ள எஸ்ஏ20 லீக் தொடரானது மூன்றாவது சீசனுக்காக தற்போதில் இருந்தே தயாராகி வருகிறது. மேற்கொண்டு நடைபெற்று முடிந்த இரண்டு எஸ்ஏ20 லீக் தொடரிலும் ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்கேப் அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. 

Advertisement

இந்நிலையில் அடுத்த தொடருக்கான பணிகளை எஸ்ஏ20 தொடரில் பங்கேற்கும் அணிகள் தற்போதில் இருந்தே தொடங்கியுள்ளன. அந்தவகையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் உரிமையாளர்களுடைய பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணியும் எதிர்வரவுள்ள எஸ்ஏ20 லீக் தொடருக்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி எதிர்வரும் எஸ்ஏ 20லீக் தொடருக்கான பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஜானதன் டிராட் நியமிக்கப்பட்டுள்ளார். 

முன்னதாக அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ரிக்கி பாண்டிங், டெல்லி கேப்பிட்டல்ஸில் இருந்து விலகியதை அடுத்து, அந்த அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ஜானதன் டிராட் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஆஃப்கானிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக சிறப்பாக செயல்பட்ட ஜானதன் டிராட், அதன் காரணமாக தற்சமயம் பிரிட்டோரிய அணியின் கேப்டனாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News