நடைபெற்று முடிந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஏற்பட்ட படுதோல்விக்கு பிறகு, மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியானது வரும் செப்டம்பர் மாதம் ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளது.  அதன்படி ஸ்காட்லாந்து அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், இங்கிலாந்து அணிக்கு எதிராக மூன்று டி20 மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் ஆஸ்திரேலிய அணி விளையாடவுள்ளது.

Advertisement

இதில் ஸ்காட்லாந்து டி20 தொடரானது செப்டம்பர் 04ஆம் தேதியும், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடர் செப்டம்பர் 11ஆம் தேதி முதல் செப்டம்பர் 21ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதனையடுத்து இத்தொடர்களுக்கான ஆஸ்திரேலிய அணி அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் இளம் வீரர்களான ஜேக் ஃபிரேசர் மெக்குர்க், கூப்பர் கானொலி உள்ளிட்ட அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

அதேசமயம், இத்தொடருக்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்திருந்த இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஸ்பென்சர் ஜான்சென் காயம் காரணமாக அணியில் இருந்து விலகினார். இவர் சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரில் விளையாடிய நிலையில், காயமடைந்து தொடரில் இருந்து விலகினார். மேலும் அவரது காயம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து ஸ்காட்லாந்து, இங்கிலாந்து தொடர்களில் இருந்தும் அவர் விலகியதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. 

இதனையடுத்து அவருக்கான மாற்று வீரராக சீன் அபோட் ஆஸ்திரேலிய டி20 அணியில் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதன்படி, அந்த அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹசில்வுட்டும் காயம் காரணமாக ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 

அதேசமயம் இங்கிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கு முன்னதாக ஜோஷ் ஹேசில்வுட் காயத்தில் இருந்து குணமடைந்து ஆஸ்திரேலிய அணியில் இணைவார் என்றும் தெரிவிக்கபட்டுள்ளது. இந்நிலையில் ஸ்காட்லாந்து தொடரில் இருந்து விலகிய ஜோஷ் ஹேசில்வுட்டிற்கு மாற்று வீரர்காக மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் ரைலீ மெரிடித் ஆஸ்திரேலிய டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 

ஏற்கெனவே ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் ஸ்டார்கிற்கு இத்தொடரில் ஓய்வு வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஸ்பென்ஸர் ஜான்சன் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் உள்ளிட்ட வேகப்பந்து வீச்சாளர்களும் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளது அந்த அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் ஸேவியர் பார்ட்லெட், நாதன் எல்லிஸ் ஆகியோருடன் மார்கஸ் ஸ்டொய்னிஸ், கேமரூன் க்ரீன், ஆரோன் ஹார்டி ஆகியோரும் இருப்பது அணியின் பலமாக பார்க்கப்படுகிறது. 

Advertisement

ஆஸ்திரேலியா டி20 அணி: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சேவியர் பார்ட்லெட், கூப்பர் கானொலி, டிம் டேவிட், நாதன் எல்லிஸ், ஜேக் ஃபிரேசர்-மெக்குர்க், கேமரூன் கிரீன், ஆரோன் ஹார்டி,  டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், சீன் அபோட், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஆடம் ஸாம்பா, ரைலீ மெரிடித்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News