இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி காலே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றது.

Advertisement

இதனையடுத்து இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியும் கலே கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதல் பேட்டிங் தேர்வு செய்தது. இதனையடுத்து தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய பதும் நிஷங்கா 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதேசமயம் மற்றொரு தொடக்க வீரரான திமுத் கருணாரத்னே 46 ரன்கள் எடுத்திருந்த போது ரன் அவுட்டாகி அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். .

Advertisement

பின்னர் ஜோடி சேர்ந்த தினேஷ் சண்டிமால் மற்றும் ஏஞ்சலோ மேத்யூஸ் பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தனர். இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த தினேஷ் சண்டிமால் தனது 16ஆவது டெஸ்ட் சதத்தைப் பதிவுசெய்து அசத்திய நிலையில்,116 ரன்னில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கமிந்து மெண்டிஸும் அபாரமாக விளையாடியதுடன் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். .

இதன்மூலம் இலங்கை அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 306 ரன்களை எடுத்துள்ளது. இலங்கை தரப்பில் ஏஞ்சலோ மேத்யூஸ் 78 ரன்களுடனும், கமிந்து மெண்டிஸ் 51 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்நிலையில் இப்போட்டியில் இலங்கை அணி தரப்பில் 5ஆவது விக்கெட்டிற்கு களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அரைசதம் கடந்து அசத்திய கமிந்து மெண்டிஸ் புதிய வரலாறு படைத்துள்ளார்.

 

அதன்படி இலங்கை அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டராக உருவெடுத்துள்ள கமிந்து மெண்டிஸின் 8ஆவது 50 பிளஸ் ஸ்கோர் இதுவாகும். இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அறிமுக போட்டிக்கு பிற்கு தொடர்ச்சியாக 8 போட்டிகளில் அரைசதங்கள் அடித்த முதல் வீரர் எனும் சாதனையை கமிந்து மெண்டிஸ் படைத்துள்ளார். அதன்படி இலங்கை அணிக்காக இதுவரை 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4 அரைசதங்கள், 4 சதங்களை கமிந்து மெண்டிஸ் விளாசி அசத்தியுள்ளார். 

Advertisement

தொடர்ச்சியாக டெஸ்ட் போட்டிகளில் 50+ ஸ்கோர்கள் அடித்த வீரர்கள்

  • 8 - கமிந்து மெண்டிஸ்*
  • 7 - சௌத் ஷகீல்
  • 6 - பர்ட் சட்க்ளிஃப்
  • 6 - சயீத் அகமது
  • 6 - சுனில் கவாஸ்கர்

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News