பாகிஸ்தான் -  இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி முல்தானில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக அப்துல்லா ஷபீக் மற்றும் சைம் அயூப் களமிறங்கினர்.

Advertisement

இதில் அப்துல்லா ஷபீக் 7 ரன்னிலும், அடுத்து வந்த கேப்ட்ன் ஷான் மசூத் 3 ரன்னிலும் வெளியேறினர். இதனையடுத்து சைம் அயூப் உடன் கம்ரான் குலாம் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடி அரைசதம் அடித்தனர். இதில் சைம் அயூப் 77 ரன்னிலும், அடுத்து வந்த சவுத் ஷகீல் 4 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதேசமயம் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கம்ரான் குலாம் அறிமுக போட்டியில் சதம் அடித்து அசத்தினார்.

Advertisement

அதன்பின் 118 ரன்களைச் சேர்த்த நிலையில் காம்ரன் குலாமும் தனது விக்கெட்டை இழந்தார். இதையடுத்து இணைந்துள்ள முகமது ரிஸ்வான் மற்றும் ஆகா சல்மான் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதன்மூலம் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டை இழந்து 259 ரன்கள் எடுத்துள்ளது. இதில் முகமது ரிஸ்வான் 37 ரன்னுடனும், ஆகா சல்மான் 5 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் ஜேக் லீச் 2 விக்கெட் வீழ்த்தி உள்ளார்.

இந்நிலையில் தனது அறிமுக போட்டியில் சதம் விளாசியது குறித்து பேசியுள்ள காம்ரன் குலாம், “பொறுமையின் பலன் எப்பொழுதும் இனிமையாக இருக்கும் என்றும் அது இன்று நிரூபணமாகியுள்ளது. நான் எனது வாய்ப்பிற்காக ஆர்வமாக இருந்தேன், அது எப்போது எனக்கு கிடைக்கும் என நான் மிகவும்  எதிர்பார்த்து எப்போதும் காத்திருந்தேன். பாபர் ஆசாமின் இடத்தை நிரப்ப வேண்டிய அழுத்தம் இருந்தது, அதனால் நான் ஏதாவது சிறப்பாக செய்ய வேண்டியிருந்தது.

எனவே நான் ஒரு சாதனையை அடைந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன் மற்றும் எனது காத்திருப்பு முடிந்துவிட்டது” என்று தெரிவித்துள்ளார். அதன்படி அறிமுக டெஸ்டில் சதம் அடித்த பாகிஸ்தானின் 13ஆவது வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இது தவிர, 4ஆவது இடத்தில் பேட்டிங் செய்யும் போது அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த இரண்டாவது பாகிஸ்தான் வீரர் எனும் பெருமையையையும் காம்ரன் குலாம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இங்கிலாந்து பிளேயிங் லெவன்: ஜாக் கிராலி, பென் டக்கெட், ⁠ஒல்லி போப், ⁠ஜோ ரூட், ⁠ஹாரி புரூக்,⁠ பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்),⁠ ⁠ஜேமி ஸ்மித், பிரைடன் கார்ஸ், ⁠மாட் பாட்ஸ், ⁠ஜாக் லீச், ஷோயப் பஷீர்

Advertisement

பாகிஸ்தான் பிளேயிங் லெவன்: சைம் அயூப், அப்துல்லா ஷபீக், ஷான் மசூத் (கேப்டன்), காம்ரன் குலாம், சௌத் ஷகீல், முகமது ரிஸ்வான், சல்மான் அலி ஆகா, அமீல் ஜமால், நோமன் அலி, சஜித் கான், ஸாஹித் மஹ்மூத்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News