பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 9ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் எந்தெந்த அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளன. இந்நிலையில் இன்று நடைபெறும் 26ஆவது லீக் போட்டியில் ஷாஹின் அஃப்ரிடி தலைமையிலான லாகூர் கலந்தர்ஸ் அணியை எதிர்த்து, ஷான் மசூத் தலைமையிலான கரச்சி கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்துகிறது. இத்தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு முல்தான் சுல்தான்ஸ், பெஷாவர் ஸால்மி அணிகள் முன்னேறியுள்ள நிலையில், மீதமிருக்கும் இரு இடங்களுக்காக கடும் போட்டி நிலவி வருகிறது. இதில் லாகூர் கலந்தர்ஸ் அணி வாய்ப்பை இழந்துள்ளதால் அவர் ஆறுதல் வெற்றியைத் தேட முயற்சிப்பார்கள். அதேசமயம் கராச்சி கிங்ஸ் அணி எதிர்வரும் போட்டிகளில் வெற்றிபெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Advertisement

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் -  லாகூர் கலந்தர்ஸ் vs கராச்சி கிங்ஸ்
  • இடம் - தேசிய கிரிக்கெட் மைதானம், கராச்சி
  • நேரம் - இரவு 7.30 மணி
Advertisement

பிட்ர் ரிப்போர்ட்

இப்போட்டி நடைபெறும் தேசிய கிரிக்கெட் மைதானமானது பேட்டர்களுக்கு சாதகமானதாக இருந்து வருகிறது. அதிலும் இந்த அமைதானத்தின் பேட்டங் சராசரியானது 180 ரன்களை தாண்டுவதால் பேட்டர்களுக்கு சொர்க்கபுரியாக பார்க்கப்படுகிறது. அதேசயம் கடந்த சீசனில் இந்த மைதானத்தில் நடைபெற்ற சில போட்டிகளில் இமாலய இலக்குகளையும் அணிகள் எளிதாக கடந்து வெற்றிபெற்றிருந்தன. இதனால் இப்போட்டியின் இரு இன்னிங்ஸிலும் மைதானத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்பதால் பேட்டர்கள் அதிரடியாக விளையாடி ஸ்கோரை குவிக்கலாம்.

நேரலை 

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரை இந்திய ரசிகர்கள் ஃபேன்கோட் செயலி மூலம் நேரலையில் கண்டுகளிக்கலாம்.

Advertisement

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 18
  • கராச்சி கிங்ஸ் - 12
  • லாகூர் கலந்தர்ஸ் - 08

உத்தேச லெவன்

லாகூர் கலாந்தர்ஸ்: சாஹிப்சாதா ஃபர்ஹான், ஃபகர் ஸமான், ரஸ்ஸி வான் டெர் டுசென், சிக்கந்தர் ரஸா, ஷாய் ஹோப், அஹ்சன் பாட்டி, டேவிட் வைஸ், ஜஹந்தத் கான், ஷஹீன் அஃப்ரிடி (கே), தயுப் அப்பாஸ், ஸமான் கான்.

Advertisement

கராச்சி கிங்ஸ்: டிம் செய்ஃபெர்ட், ஷான் மசூத் (கே), ஜேம்ஸ் வின்ஸ், கீரன் பொல்லார்ட், ஷோயப் மாலிக், இர்ஃபான் கான், முகமது நவாஸ், ஹசன் அலி, ஜாஹித் மஹ்மூத், மிர் ஹம்சா, பிளஸ்ஸிங் முசரபானி.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்: சாஹிப்சாதா ஃபர்ஹான், டிம் செய்ஃபெர்ட் (துணை கேப்டன்)
  • பேட்டர்ஸ்: கீரென் பொல்லார்ட், ஜேம்ஸ் வின்ஸ், ராஸ்ஸி வான்டெர் டுசென் (கேப்டன்)
  • ஆல்ரவுண்டர்கள்: சோயப் மாலிக், சிக்கந்தர் ரஸா, டேவிட் வைஸ்
  • பந்துவீச்சாளர்கள்: பிளஸ்ஸிங் முசரபானி, ஷாஹீன் அஃப்ரிடி

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News