Karun Nair Injured: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்க இருக்கும் நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் கருண் நாயர் வலைபயிற்சியின் போது கயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Advertisement

ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடியேயான முதல் டெஸ்ட் போட்டி ஹெடிங்க்லேவில் உள்ள லீட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நாளை (ஜூன் 20)நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலியில் இப்போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் நேற்றையை தினம் அறிவிக்கப்பட்டது.

Advertisement

அதேசமயம் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்தெந்தெ வீரர்கள் இடம்பிடிப்பார்கள் என்ற கேள்விகளும், சந்தேகங்களும் அதிகரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக ஏழாண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் அணியில் வாய்ப்பு பெற்றுள்ள கருண் நாயருக்கு இந்த போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்குமா, அப்படி வாய்ப்பு கிடைத்தால் அவர் எந்த இடத்தில் களமிறங்குவார் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.  

இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக வலைபயிற்சியில் ஈடுபட்டிருந்த கருன் நாயர் காயத்தை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. அந்தவகையில் கருண் நாயர் வலை பயிற்ச்யின் போது பிரஷித் கிருஷ்ணா பந்துவீச்சை எதிர்கொண்டுள்ளார். அப்போது பிரஷித் வீசிய ஒரு பந்தை கருண் நாயர் சரியாக கணிக்க தவறியதன் காரணமாக விலா எழும்பு பகுதியில் காயத்தை சந்தித்தாக கூறப்படுகிறது. இதனையடுத்து அணி மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருவதாக கூறப்படுகிறது.

இருப்பினும் கருண் நாயரின் காயம் எவ்வளவு தீவிரமானது என்பது குறித்து இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஒருவேளை அவரது காயம் தீவிரமடையும் பட்சத்தில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அவர் இடம்பிடிக்க மாட்டார் என்று கூறப்படுகிறது. ஒருவேளை அவர் இப்போட்டியை தவறவிட்டால் அது இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என கணிக்கப்படுகிறது. 

Also Read: LIVE Cricket Score

Advertisement

ஏனெனில் கருண் நாயர் தற்சமயம் சிறப்பான ஃபார்மில் உள்ளார். சமீபத்தில் கூட இங்கிலாந்து லையன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இரட்டை சதம் அடித்தும் மிரட்டினார். இதுபோன்ற சூழ்நிலையில் அவர் காயமடைந்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்திய அணிக்காக கடந்த 2016ஆம் ஆண்டு அறிமுகமான கருண் நாயர் இதுவரை 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் அதில் ஒரு முற்சதத்தையும் விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News