பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெறும் நடப்பாண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இம்மாதம் 30ஆம் தேதி தொடங்குகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், நேபாள், ஆஃப்கானிஸ்தான் ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன.

Advertisement

உலகக்கோப்பை தொடருக்கு முன்பு இந்த தொடர் நடைபெறுவதால் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. உலக கோப்பையில் யார் அணியில் இடம்பெறப் போகிறார்கள் என்பதை தீர்மானிக்கும் தொடராக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

இந்திய அணியில் தற்போது மூன்று இடம்தான் பேட்டிங்கில் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. ஷுப்மன் கில், ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் தங்களுடைய இடத்தை பிடித்துக் கொண்டுள்ளனர். தற்போது இந்திய அணியில் பிரச்சனையே நடு வரிசையிலும் விக்கெட் கீப்பிங் யார் செய்வார்கள் என்பதும் தான்.

அதன்படி, கே எல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் ஆகியோர் தற்போது காயம் காரணமாக கிரிக்கெட் விளையாட வில்லை. இதனால் நடுவரிசையில் தற்போது சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் கே எல் ராகுலும் ஸ்ரேயாஸ் ஐயரும் ஆசிய கோப்பை தொடருக்கு இந்திய அணியில் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அவர்கள் வந்தவுடன் அணியில் இருக்கும் பேட்டிங் பிரச்சனை தீர்ந்துவிடும் எனும் கூறப்பட்டது. இதற்கு ஏற்றார் போல் ஸ்ரேயாஸ் ஐயரும், கே எல் ராகுலும் தங்களுடைய பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் காணொளிகள் சமூக வலைத்தளத்திலும் வெளியானது.

இந்த நிலையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இவ்விரு வீரர்களும் விளையாட மாட்டார்கள் என்ற செய்தி வெளிவந்துள்ளது. இருவரும் காயத்திலிருந்து தங்களுடைய முழு உடல் தகுதியை எட்டுவதற்கு குறைந்தபட்சம் இரண்டு மாதங்கள் ஆகுமாம்.

Advertisement

இதன் காரணமாக ஆசிய கோப்பை தொடரில் கே எல் ராகுலும், ஸ்ரேயாஸ் ஐயரும் இடம் பெற மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. அதே போல் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கும் இவர்கள் அணிக்கு திரும்புவது சந்தேகம் என கூறப்படுகிறது.

காரணம் உலகக் கோப்பை தொடர்க்கும் முன்பு தயாராகி விட்டாலும் கடந்த ஆறு மாதங்களுக்கு மேல் கிரிக்கெட் விளையாடாமல் இவ்வளவு பெரிய தொடரில் இவ்விரு வீரர்களையும் சேர்க்க இந்திய அணி நிர்வாகம் தயாராக இல்லை. இதனால் சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ் ஆகியோரை வைத்து உலகக் கோப்பையை விளையாட இந்திய அணி நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News