ஜூன் மாதம் முதல் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நடைபெற உள்ளது. மேற்கொண்டு இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடைபெறவுள்ள காரணத்தால் இதன் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Advertisement

இத்தொடருக்கு முன்னதாக இந்திய ஏ அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இங்கிலாந்து லையன்ஸ் அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. அதன்பாடி இந்தியா ஏ மற்றும் இங்கிலாந்து லையன்ஸ் அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி மே 30 முதல் ஜூன் 2ஆம் தேதி வரையிலும், இரண்டாவது போட்டி ஜூன் 6 முதல் 9ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது. அதனைத்தொடர்ந்து இந்திய சீனியர் அணிக்கு எதிராக ஒரு போட்டியில் விளையாடவுள்ளது. 

Advertisement

மேற்கொண்டு இத்தொடருக்கான இந்திய ஏ அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. அதன்படி அபிமன்யூ ஈஸ்வரன் தலைமையிலான இந்த அணியில் துணைக்கேப்டனாக துருவ் ஜூரெல் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கொண்டு கருண் நாயர், ருதுராஜ் கெய்க்வாட், ஷர்தூல் தாக்கூர், இஷான் கிஷனுக்கும் இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் காரணமாக சாய் சுதர்ஷன் மற்றும் ஷுப்மன் கில் ஆகியோர் இரண்டாவது போட்டியில் இணைவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இரண்டாவது போட்டிக்கான இந்திய ஏ அணியில் கேஎல் ராகுலும் சேர்க்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியின் தொடக்க வீரராக கேஎல் ராகுல் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அதற்கு தேவையான பயிற்சியை பெரும் விதமாக கேஎல் ராகுல் இங்கிலாந்து லையன்ஸ் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் விளையாடுவார் என தகவல்கள் வெளியாகிவுள்ளன. 

இதுகுறித்து வெளியான தகவலின் அடிப்படையில், “இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முன்னதாக, இந்தியா 'ஏ' அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் விளையாடுவது ராகுலுக்கு ஒரு முக்கியமான ஆயத்தப் போட்டியாக அமையும். அதேசமயம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாததன் காரணமாக கேஎல் ராகுல் டெஸ்ட் தொடருக்காக தன்னை தயார்படுத்துக்கொள்ள இது வாய்ப்பாக அமையும் என்று கூறப்பட்டுள்ளது. 

Also Read: LIVE Cricket Score

Advertisement

இந்திய ஏ அணி: அபிமன்யு ஈஸ்வரன் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கருண் நாயர், துருவ் ஜூரல் (விசி) (வாரம்), நிதிஷ் குமார் ரெட்டி, ஷர்துல் தாக்கூர், இஷான் கிஷன் (வாரம்), மானவ் சுதர், தனுஷ் கோட்டியன், முகேஷ் குமார், ஆகாஷ் தீப், ஹர்ஷித் ராணா, அன்ஷுல் கம்போஜ், கலீல் அகமது, ருதுராஜ் கெய்க்வாட், சர்ஃபராஸ் கான், துஷார் தேஷ்பாண்டே, ஹர்ஷ் துபே. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News