பிளே-ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க எஞ்சியுள்ள அனைத்து போட்டியிலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் வெற்றிபெற வேண்டி இருப்பதால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசனில் இன்று இரவு 7.30 மணிக்கு துபாயில் தொடங்கும் 45ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. 

Advertisement

நடப்பு சீசன் பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிசெய்ய வேண்டிய கட்டாயம் இருப்பதால் இந்த ஆட்டம் இரு அணிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்தாக கருதப்படுகிறது.

அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நடப்பு சீசனில் 11 போட்டிகளில் விளையாடி, 5 வெற்றி, 6 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 4ஆவது இடத்திலும், பஞ்சாப் கிங்ஸ் அணி 11 போட்டிகளில் 4 வெற்றி, 7 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 6ஆவது இடத்திலும் உள்ளது.

பிளே-ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க எஞ்சியுள்ள அனைத்து போட்டியிலும் இரு அணிகளும் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

உத்தேச அணி 

Advertisement

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: சுப்மேன் கில், வெங்கடேஷ் ஐயர், ராகுல் திரிபாதி, ஈயான் மோர்கன் (கே), நிதிஷ் ராணா, தினேஷ் கார்த்திக், சுனில் நரைன், டிம் சவுதி, லோக்கி ஃபர்குசன், சந்தீப் வாரியர், வருண் சக்கரவர்த்தி.

பஞ்சாப் கிங்ஸ்: கேஎல் ராகுல் (கே), மயங்க் அகர்வால், ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், தீபக் ஹூடா, ஃபாபியன் ஆலன், ஹர்பிரீத் பிரார், நாதன் எல்லிஸ், முகமது ஷமி, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News