இலங்கை மகளிர் அணி அடுத்ததாக அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் இரண்டு டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இவ்விரு அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன. அதன்படி நடந்து முடிந்த டி20 தொடரின் முதல் போட்டியில் இலங்கை மகளிர் அணியும், இரண்டாவது டி20 போட்டியில் அயர்லாந்து அணியும் வெற்றிபெற்று 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்து அசத்தியுள்ளன. 

Advertisement

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நாளை முதல் பெல்ஃபெஸ்டில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே அயர்லாந்து அணி மிகப்பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. நடைபெற்று முடிந்த டி20 தொடரின் போது காயமடைந்த அயர்லாந்து மகளிர் அணி கேப்டன் லாரா டெலானி ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

இதனை அயர்லாந்து கிரிக்கெட் வாரியமும் உறுதிசெய்துள்ளது. இதனையடுத்து அயர்லாந்து மகளிர் அணியின்  புதிய கேப்டனாக கேபி லூயிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் சதமடித்து அசத்தியதன் மூலம் கேபி லூயிஸிற்கு இந்த பொறுப்பானது வழங்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு அணியின் தற்காலிக துணைக்கேப்டனாக ஓர்லா பிரெண்டர்காஸ்ட் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேற்கொண்டு ஒருநாள் தொடருக்கான அயர்லாந்து மகளிர் அணியில் இருந்து விலகியா லாரா டெலானிக்கு பதிலாக ஜேன் மாகுவேர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். முன்னதாக அயர்லாந்து டி20 அணியில் மட்டுமே இடம்பிடித்து விளையாடிய ஜேன் மாகுவேர், தற்சமயம் மீண்டும் ஒருநாள் அணியில் இடம்பிடித்துள்ளார். இருப்பினும் அணியின் கேப்டன் காயம் காரணமாக விலகியுள்ளது அயர்லந்து அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 

அயர்லாந்து மகளிர் ஒருநாள் அணி: கேபி லூயிஸ் (கே), அவா கேனிங், அலனா டால்செல், ஆமி ஹண்டர், ஜேன் மாகுவேர், அர்லீன் கெல்லி, ஜோனா லௌரன், ஐமி மாகுவேர், லியா பால், ஓர்லா ப்ரெண்டர்காஸ்ட், உனா ரேமண்ட்-ஹோய், ஃப்ரேயா சார்ஜென்ட், ரெபேக்கா ஸ்டோகெல், ஆலிஸ் டெக்டர்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News