Litton Das Record: இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி விக்கெட் கீப்பர் லிட்டன் தாஸ் ஒரு கேட்சை பிடித்ததன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் முஷ்ஃபிக்கூர் ரஹிமின் சாதனையை முறியடித்துள்ளார். 

Advertisement

இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்புவில் உள்ள சிங்கள ஸ்போர்ட் கிளப் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்த. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 247 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஷாத்மான் இஸ்லாம் 46 ரன்களையும், முஷ்ஃபிகூர் ரஹிம் 35 ரன்களையும் சேர்த்தனர். 

Advertisement

பின்னர் முதல் இன்னிங்ஸை விளையாடிய இலங்கை அணியில் பதும் நிஷங்கா 158 ரன்களையும், தினேஷ் சண்டிமல் 93 ரன்களையும், குசால் மெண்டிஸ் 84 ரன்களையும் சேர்த்ததன் மூலம் 458 ரன்களைச் சேர்த்து அசத்தியது. இதன்மூலம் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 211 ரன்கள் முன்னிலையும் பெற்றது. இதனையடுத்து வங்கதேச அணியானது தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸைத் தொடரவுள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் வங்கதேச வீரர் லிட்டன் தாஸ் சிறப்பு சாதனை ஒன்றை படைத்துள்ளார். 

அந்தவகையில் இப்போட்டியில் லிட்டன் தாஸ் இலங்கை வீரர் தினேஷ் சண்டிமலின் கேட்சை பிடித்ததன் மூலம், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் வங்கதேச அணியின் விக்கெட் கீப்பராக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் சாதனையைப் படைத்துள்ளார். முன்னதாக முஷ்ஃபிக்கூர் ரஹீம் 99 இன்னிங்ஸ்களில் 113 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்த நிலையில் தற்போது லிட்டன் தாஸ் 65 இன்னிங்ஸ்களில் 114 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனை படைத்துள்ளார். 

டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வங்கதேச விக்கெட் கீப்பர்

  • 114– லிட்டன் தாஸ் (65 இன்னிங்ஸ்)
  • 113 முஷ்பிகுர் ரஹீம் (99 இன்னிங்ஸ்)
  • 87 காலித் மஷூத் (61 இன்னிங்ஸ்)
  • 34 – நூருல் ஹசன் (18 இன்னிங்ஸ்)
  • 9 ஜாகர் அலி (4 இன்னிங்ஸ்)

Also Read: LIVE Cricket Score

Advertisement

இதில் சிறப்பு என்னவென்றால், லிட்டன் இந்த சாதனையை வெறும் 65 இன்னிங்ஸ்களில் செய்துள்ளார் என்பது தன். லிட்டன் தாஸ் கடந்த 2015 ஆம் ஆண்டு வங்கதேச அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான நிலையில் இதுவரை அவர் 50 டெஸ்ட் போட்டிகளில் 39 போட்டிகளில் விக்கெட் கீப்பராக செயல்பட்டுள்ளார். மேலும் அவர் பேட்டிங்கில் 4 சதம், 18 அரைசதங்களுடன் 2881 ரன்களை எடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News