சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்களுக்காக நடத்தபட்டு வரும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் மற்றும் கோனார்க் சூர்யாஸ் ஓடிசா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

Advertisement

இப்போட்டியில் டாஸ் வென்ற சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய கோனார்க் சூர்யாஸ் அணிக்கு தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் முனவீரா ரன்கள் ஏதுமின்றியும், கெவின் ஓ பிரையன் 2 ரன்களிலும், ஜெஸ்ஸி ரைடர் மற்றும் நட்ராஜ் ஆகியோர் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழக்க, தொடக்க வீரராக களமிறங்கிய ரிச்சர்ட் லீவியும் 22 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். இதனால் அந்த அணி 53 ரன்களிலேயே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

Advertisement

பின்னர் இணைந்த கேப்டன் இர்ஃபான் பதான் - யூசுஃப் பதான் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இர்ஃபான் பதான் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய யூசுஃப் பதான் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 43 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்ப, அணியை கரைசேர்த்த கேப்டன் இர்ஃபான் பதானும் 63 ரன்களை எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். 

இதனால் கோனார்க் சூர்யாஸ் ஒடிசா அணியானது 20 ஓவர்கள் முடிவில்8 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்களைச் சேர்த்தது. சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணி தரப்பில் ஹமித், அப்துல் ரஸாக், சுபோத் பாடி, கேதர் ஜாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் மார்ட்டின் கப்தில் 4 ரன்களிலும், ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி 23 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். பின்னர் இணைந்த ஹாமில்டன் மஸகட்ஸா மற்றும் பவன் நெகி இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். 

இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹாமில்டன் மஸகட்ஸா தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். பின்னர் 67 ரன்களை எடுத்திருந்த நிலையில் மஸகட்ஸா தனது விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பவன் நெகி 40 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணி 17.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் கோனார்க் சூர்யாஸ் ஒடிசா அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றதுடன், இத்தொடரின் இறுதிப்போட்டிக்கும் முதல் அணியாக முன்னேறி அசத்தியுள்ளது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News