நான்காவது சீசன் லங்கா பிரீமியர் லீக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற 5ஆவது லீக் ஆட்டத்தில் கலே டைட்டன்ஸ் - பி லௌவ் கண்டி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ர கலே டைட்டன்ஸ் அணி பேட்டிங் செய்வதாக தீர்மானித்து களமிறங்கியது. 

Advertisement

அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்களாக ஷெவோன் டேனியல் - லசித் க்ரூஸ்புலே இணை களமிறங்கியது. இதில் லசித் 11 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய பனுகா ராஜபக்‌ஷா 4 ரன்களிலும் ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீரரான ஷெவோன் டேனியலும் 25 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். 

Advertisement

இதையடுத்து ஜோடி சேர்ந்த் டிம் செய்ஃபெர்ட் - ஷாகிப் அல் ஹசன் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசிய டிம் செய்ஃபெர்ட் அரைசதம் கடந்து அசத்தினார். 

அதேசமயம் 30 ரன்களை எடுத்திருந்த ஷாகிப் அல் ஹசன் எதிர்பாரதவிதமாக ரன் அவுட்டாகினார்.  அவரைத் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த டிம் செய்ஃபெர்ட் 5 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 74 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். இறுதியில் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்களைச் சேர்த்தது. 

இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய கண்டி அணி வீரர் தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர். அந்த அணியில் தானுகா 12, தினேஷ் சண்டிமல் 0, கமிந்து மெண்டிஸ் 3, ஏஞ்சலோ மேத்யூஸ் 2, வநிந்து ஹசரங்கா 9, ஆசிஃப் அலி 3, அமர் ஜமால் 6, இசுரு உதானா 16 ரன்கள் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 

அந்த அணியில் அதிகபட்சமாக அஷென் பண்டாரா 27 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இதனால் கண்டி அணி 17.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 97 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் கலே டைட்டன்ஸ் அணி 83 ரன்கள் வித்தியாசத்தில் பி லௌவ் கண்டி அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News