நவீன் உல் ஹக்கை வம்பிழுத்த ரசிகர்கள்; வைரல் காணொளி!

Updated: Wed, May 17 2023 20:11 IST
Lucknow crowd Teases Naveen ul haq with KOHLI KOHLI chants (Image Source: Google)

நேற்று ஐபிஎல் தொடரில் முக்கியமான ஒரு ஆட்டத்தில் மும்பை மற்றும் லக்னோ அணிகள் லக்னோ மைதானத்தில் மோதிக்கொண்டன. பெங்களூரு அணிக்கு எதிரான லக்னோவில் நடந்த போட்டிக்கு பிறகு அணியில் வாய்ப்பு பெறாத ஆப்கானிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் நவீன் உல் ஹக் இந்த ஆட்டத்தில் இடம் பிடித்து இருந்தார்.

விராட் கோலியுடன் ஏற்பட்ட வாய்த்தகராறுக்கு பிறகு அவர் லக்னோ அணிக்காக விளையாட வர, அணியின் வெளிநாட்டு தொடக்க வீரர் கைல் மேயர்ஸ் இடத்தை இழந்திருந்தார். இந்தப் போட்டியின் போது நவீன் பீல்டிங் செய்து கொண்டிருக்கையில் அவருக்குப் பின்பு இருந்து ரசிகர்கள் கோலி கோலி கோலி என்று அவரை எரிச்சல் அடையும்படி சத்தமிட்டார்கள்.

ரசிகர்களின் இந்தச் செயலுக்கு நவீன் இன்னும் அதிகமாக கத்துங்கள் என்பது போல சைகை செய்து அந்த நிகழ்வுக்கு தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்தார். விராட் கோலி, நவீன், கம்பீர் என்று களத்தில் சென்ற பிரச்சனை, அதற்குப் பிறகு இன்ஸ்டாகிராம் வரையில் தொடர்ந்து கொண்டு இருந்தது. தற்பொழுதுதான் அதற்கு ஒரு முடிவு வந்திருந்தது.

 

இந்த நிலையில் கம்பீர் மற்றும் நவீன் எந்த இடங்களுக்குச் சென்றாலும் அங்கு விராட் கோலியின் பெயரை உச்சரித்து ரசிகர்கள் இவர்கள் இருவரையும் எரிச்சலடையும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள். நேற்று மைதானத்தில் ரசிகர்கள் நவீனை பார்த்து கோலி கோலி கோலி என்று கத்திய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை