தற்போது சர்வதேச கிரிக்கெட்டின் இரண்டு வடிவத்திலும் (ஒருநாள் & டி20) உலக சாம்பியனாக இங்கிலாந்து இருந்து வருகிறது. அவர்களின் அதிரடியான ஆட்ட அணுகுமுறை, மற்றும் பேட்டிங் நீளத்தை அதிகரிப்பதற்காக ஆல்ரவுண்டர்களை உருவாக்குவது என்று நிறைய முன்னேறி இருக்கிறார்கள். இந்த நிலையில் இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு,இங்கிலாந்து கிரிக்கெட்டின் நட்சத்திர ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸின் ஓய்வு அறிவிப்பை ரத்து செய்ய வைத்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அழைத்துக் கொண்டு வந்திருக்கிறது.

Advertisement

இந்த நிலையில் அவர் காலில் ஏற்பட்ட ஒரு சிறிய காயத்தின் காரணமாக நியூசிலாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை துவக்க ஆட்டத்தில் இடம்பெறவில்லை. அந்த நேரத்திலேயே இங்கிலாந்து அணிக்கு இது ஒரு பெரிய பின்னடைவாக இருக்கும் என்று பலராலும் கூறப்பட்டது. அந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி பேட்டிங்கில் சரியான அணுகுமுறையை கையாளாமல் சொதப்பி 282 ரன்களுக்கு சுருண்டது. அந்த ஆடுகளத்தில் இது குறைந்த ஸ்கோர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் இங்கிலாந்து அணி பந்து வீச்சுக்கு திரும்ப வந்து நியூசிலாந்து அணியின் ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே கைப்பற்றி 36 ஓவர்களில் இலக்கை எட்ட விட்டு நியூசிலாந்து அணியிடம் படுதோல்வி அடைந்து அதிர்ச்சி கொடுத்தது. இதன் காரணமாக அணியில் பென் ஸ்டோக்ஸ் இல்லாதது குறித்து நிறைய விவாதங்கள் உருவாகின.

இதுகுறித்து பேசி உள்ள இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் மார்க் வுட், “நான் அவர் மீது அழுத்தம் கொடுக்க விரும்பவில்லை. அவர் சூப்பர் மேன் கிடையாது. அவர் திரும்ப வந்து எல்லாவற்றையும் திருப்பி செய்வது பற்றியது இது கிடையாது. எங்கள் அணியின் சிறந்த வீரர்களில் அவரும் ஒருவர் என்பதில் சந்தேகம் இல்லை. இப்படியானவர் இல்லாவிட்டாலும் கூட எங்கள் அணியின் மற்ற வீரர்கள் எல்லோரும் எழுந்து நிற்க வேண்டும். அவர் தனது காலை சுற்றி தற்பொழுது கட்டி இருக்கிறார். அது அவரை பயிற்சியில் மேற்கொண்டு நகர அனுமதிக்கிறதா? என்று பார்க்க வேண்டும்.

ஒரு குழுவின் சிறந்த குணாதிசயம் உள்ளுக்குள் நெகிழ்ச்சியாகவும் தங்களை தாங்கள் நம்பக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டும். அதே சமயத்தில் தோல்விகளில் இருந்து மீண்டு வர வேண்டும். எங்களால் இதிலிருந்து மீண்டு வர முடியும். நாங்கள் உலக கோப்பையை தக்க வைக்க விரும்புகிறோம் என்று காட்ட முடியும். எங்கள் மீது மக்களுக்கு கேள்வி இருந்தால் அதை தீர்த்து வைக்க முடியும். நாங்கள் இதிலிருந்து நிச்சயம் வெளியே வருவோம்” என்று தெரிவித்துள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News