ஐசிசி தரவரிசை: டாப் 5-க்குள் நுழைந்த ஷுப்மன் கில்; அசுர வளர்ச்சியில் மார்க்ரம்!

Updated: Wed, Apr 05 2023 20:24 IST
Image Source: Google

நெதர்லாந்து - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் சமீபத்தில் முடிவடைந்தது. இந்நிலையில் சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான வீரர்கள் தரவரிசைப் பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. 

இதில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் 887 புள்ளிகளுடன் முதலிடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் ரஸ்ஸி வெண்டர் டுசென் 777 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், பாகிஸ்தானின் இமாம் உல் ஹக்     740 புள்ளிகளுடன் 3ஆம் இடத்திலும் நீடிக்கின்றனர். 

இவரகளைத் தொடர்ந்து 738 புள்ளிகளுடன் இந்தியாவின் நட்சத்திர வீரர் ஷுப்மன் கில் 4ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். அதேபோல் இந்திய வீரர் விராட் கோலி ஒரு இடம் முன்னேறி 6ஆம் இடத்திற்கும், ரோஹித் சர்மா 8ஆவது இடத்திலும் நீடிக்கின்றனர். 

அதேசமயம் நெதர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சதமடித்ததன் மூலம் தென் ஆப்பிரிக்க வீரர் ஐடன் மார்க்ரம் 13 புள்ளிகள் முன்னேறி 41ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். நெதர்லாந்து அணியை சேர்ந்த மேக்ஸ் ஓடவுட் மற்றும் விக்ரம்ஜித் சிங் ஆகியோரும் முன்னேற்றம் கண்டுள்ளனர். 

பந்துவீச்சாளர்கள் தவரிசையில் ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹசில்வுட் முதலிடத்திலும், நியூசிலாந்தின் டிரெண்ட் போல்ட் இரண்டாம் இடத்திலும், இந்தியாவின் முகமது சிராஜ் மூன்றாம் இடத்திலும் நீடிக்கின்றனர். மேலும் இப்பட்டியளில் இடம்பிடித்த ஒரே இந்திய வீரராகவும் சிராஜ் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை