இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நாளை நடைபெறும் 25ஆவது லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. நடப்பாண்டு ஐபிஎல் தொடர் இரு அணிகளுக்கும் சரிவர அமையவில்லை. இதில் ஆர்சிபி அணி விளையாடிய 5 போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது. அதேசமயம் மறுபக்கம் தொடர்ச்சியான தோல்விகளைச் சந்தித்து வந்த மும்பை இந்தியன்ஸ் அணியானது இறுதியாக டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி தங்கள் முதல் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

Advertisement

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
  • இடம் - வான்கடே கிரிக்கெட் மைதானம், மும்பை
  • நேரம் - இரவு 7.30 மணி
Advertisement

போட்டி முன்னோட்டம்

ஹர்திக் பாண்டியா தலைமையில் நடப்பு சீசனை எதிர்கொண்டுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி அடுத்தடுத்து மூன்று தோல்விகளைத் தழுவினாலும், கடைசியா டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி தங்களது முதல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. அணியின் பேட்டிங் ஆர்டரைப் பொறுத்தவரையில் ரோஹித் சர்மா, இஷான் கிஷான், ஹர்திக் பாண்டியா, திலக் வர்மா, டிம் டேவிட், ரொமாரியோ ஷெஃபெர்ட் ஆகியோருடன் தற்போது சூர்யகுமார் யாதவும் அணியில் இடம்பிடித்திருந்து அணிக்கு பலத்தை கூட்டியுள்ளது. 

இருப்பினும் இதில் பெரும்பாலான வீரர்கள் சிறப்பாக தொடங்கினாலும் அதனை பெரிய ஸ்கோராக மாற்ற முடிவதில்லை என்பது அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. மறுபக்கம் பந்துவீச்சு துறையில் ஜஸ்ப்ரித் பும்ரா, ஜெரால்ட் கோட்ஸி, ஆகாஷ் மத்வால் ஆகியோர் தொடர்ந்து பேட்டர்களுக்கு தலைவலியை உண்டாக்கி வருகின்றனர். அவர்களுக்கு துணையாக்க ரொமாரியோ ஷெஃபெர்ட், முகமது நபி, பியூஷ் சாவ்லா போன்றோரும் உள்ளது அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. இதனால் அந்த அணி தங்களது வெற்றியை தக்கவைக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

மறுபக்கம் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அடுத்தடுத்து போட்டிகளில் தோல்வியைத் தழுவி ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. அதிலும் குறிப்பாக ஒவ்வொரு போட்டியிலும் விராட் கோலியைத் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் தொடர்ந்து சோபிக்க தவறிவருவது அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. நட்சத்திர வீரர்கள் ஃபாஃப் டூ பிளெசிஸ், கிளென் மேக்ஸ்வெல், ராஜத் பட்டிதார் என அனைவரும் தொடர்ந்து சொதப்பி வருவதால் நாளைய போட்டியில் அதிரடி வீரர் வில் ஜேக்ஸ் நிச்சயம் இடம்பிடிப்பார் என்ற எதிர்பார்ப்புகள் உள்ளன.

Advertisement

பந்துவீச்சை எடுத்துக்கொண்டால் ஆர்சிபி அணியின் தோல்விக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக நடப்பு சீசனில் இருந்துவருகிறது. சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டுவரும் முகமது சிராஜ் இந்த ஐபிஎல் தொடரில் பேட்டர்களை தடுக்க முடியாமல் ரன்களை வாரி வழங்கி வருகிறார். அதேசமயம் கடந்த சில போட்டிகளில் ரீஸ் டாப்லி, யாஷ் தயாள் ஆகியோரது பந்துவீச்சு அணிக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இருப்பினும், வைஷாக் விஜயகுமார், கரண் சர்மா, லோக்கி ஃபர்குசன் போன்ற பந்துவீச்சாளர்களை ஆர்சிபி அணி பயன்படுத்த தவறிவருவது குறிப்பிடத்தக்கது. 

பிட்ச் ரிப்போர்ட்

இந்த போட்டி மும்பை இந்தியன்ஸ் அணியின் சொந்த மைதானமான வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 172 ரன்களாக உள்ளது. இதனால் இங்கு டாஸ் வெல்லும் அணி முதலில் பந்து வீசுவது அணியின் வெற்றிக்கு வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 32
  • மும்பை இந்தியன்ச் - 18
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 14

நேரலை

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் தொடரின் இந்த சீசனின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டு ரசிக்கலாம். அதேசமயம் இத்தொடரின் ஓடிடி உரிமத்தை வியாகம் 18 நிறுவனம் பெற்றுள்ளதால், ரசிகர்கள் இத்தொடரை ஜியோ சினிமா ஓடிடி தளத்திலும் இலவசமாக நேரலையில் கண்டு மகிழலாம். 

Advertisement

உத்தேச லெவன்

மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் சர்மா, இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), திலக் வர்மா, டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்ஃபர்ட், பியூஷ் சாவ்லா, ஜெரால்ட் கோட்ஸி, ஜஸ்பிரித் பும்ரா, ஆகாஷ் மத்வால்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), கிளென் மேக்ஸ்வெல்/வில் ஜேக்ஸ், கேமரூன் கிரீன், ரஜத் பட்டிதார், தினேஷ் கார்த்திக், மயங்க் டாகர், ரீஸ் டாப்லி, முகமது சிராஜ், யாஷ் தயால், வைஷாக் விஜய் குமார்.

Advertisement

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர் - இஷான் கிஷன்
  • பேட்ஸ்மேன்கள் - ரோஹித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), ஃபாஃப் டு பிளெசிஸ், சூர்யகுமார் யாதவ்
  • ஆல்ரவுண்டர் - ஹர்திக் பாண்டியா, கேமரூன் கிரீன், ரொமாரியோ ஷெப்பர்ட்
  • பந்துவீச்சாளர்கள் - ஜஸ்பிரிட் பும்ரா (துணை கேப்டன்), ரீஸ் டாப்லி, ஜெரால்ட் கோட்ஸி.

MI vs RCB IPL 2024 Dream11 Prediction, Today Match MI vs RCB, MI vs RCB Dream11 Team, Fantasy Cricket Tips, MI vs RCB Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Mumbai Indians vs Royal Challengers Bangaluru

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News