நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளன. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஒரு போட்டியிலும், ஒரு போட்டி மழையாலும் கைவிடப்பட்டுள்ளது.இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது மவுண்ட் மவுங்கானூயில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர் டிம் செஃபெர்ட் அதிரடியாக விளையாட, மறுமுனையில் களமிறங்கிய நட்சத்திர வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்களை மட்டுமே எடுத்தது. இதில் அதிகபட்சமாக டிம் செஃபெர்ட் 48 ரன்களையும், மைக்கேல் பிரேஸ்வெல் 26 ரன்களையும் சேர்த்தது.

Advertisement

ஆஸ்திரேலிய அணி தரப்பில் சீன் அபோட் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணியும் சீரான இடைவேளையின் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியில் டாப் ஆர்டர் வீரர்களான டிராவிஸ் ஹெட், மேத்யூ ஷார்ட், டிம் டேவிட், அலெக்ஸ் கேரி, மார்கஸ் ஸ்டொய்னிஸ், மிட்செல் ஓவன், சேவியர் பார்ட்லெட் ஒரு ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். 

ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்த நிலையிலும், மறுமுனையில் அபாரமாக விளையாடிய மிட்செல் மார்ஷ் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்து அசத்தினார். மேலும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மிட்செல் மார்ஷ் 8 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் என 103 ரன்களையும், அவருடன் இணைந்து விளையாடிய சீன் அபோட் 13 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். 

Also Read: LIVE Cricket Score

இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 18 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி கைப்பற்றி அசத்தியுள்ளது. மேலும் இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மிட்செல் மார்ஷ் ஆட்டநாயகன், தொடர்நாயகன் விருதை வென்றனர். 

About the Author

Tamil Editorial
Tamil Editorial Read More
Latest Cricket News