ஐபிஎல் 2024: தாயகம் திரும்பும் மிட்செல் மார்ஷ்; டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு பின்னடைவு!

Updated: Sat, Apr 13 2024 22:24 IST
ஐபிஎல் 2024: தாயகம் திரும்பும் மிட்செல் மார்ஷ்; டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு பின்னடைவு! (Image Source: Google)

இந்தியாவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இத்தொடரில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நடப்பு சீசனில் விளையாடிய 6 போட்டிகளில் இரண்டு வெற்றிகளை மட்டுமே எடுத்து புள்ளிப்பட்டியலின் ஒன்பதாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இதனால் அந்த அணி அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் அடையும் வகையில் தீவிரமாக தயாராகி வருகிறது. இந்நிலையில் காயம் காரணமாக சில போட்டிகளை தவறவிட்ட டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் அதிரடி ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷ், தற்போது தனது காயம் தீவிரமடைந்ததின் காரணமாக ஆஸ்திரேலியா திரும்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

முன்னதாக இவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியின் போது காயத்தை சந்தித்தார். இதனையடுத்து, அவர் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டிகளையும் தவறவிட்டார். இந்நிலையில் தான் அவர் தனது மேல் சிகிச்சைக்காக தாயகம் திரும்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது டேல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில் ஏற்கெனவே டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பேட்டிங்கில் பெரிதளவில் சோபிக்க தவறிவரும் நிலையில் தற்போது மிட்செல் மார்ஷும் காயம் காரணமாக நாடு திரும்பியுள்ளது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் கடந்த போட்டியின் அறிமுகமான மற்றொரு ஆஸ்திரேலிய வீரர் ஜேக் ஃபிரெசர் மெக்கூர்க் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளதால் அவருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

டெல்லி கேப்பிட்டல்ஸ்: ரிஷப் பந்த்(கேப்டன்), டேவிட் வார்னர், பிருத்வி ஷா, ஜேக் ஃபிரேசர்-மெக்குர்க், யாஷ் துல், ஸ்வஸ்திக் சிகாரா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அபிஷேக் போரல், குமார் குஷாக்ரா, ரிக்கி புய், ஷாய் ஹோப், பிரவின் துபே, அக்ஸர் படேல், மிட்செல் மார்ஷ், லலித் யாதவ், விக்கி ஓஸ்ட்வால், சுமித் குமார், அன்ரிச் நோர்ட்ஜே, முகேஷ் குமார், கலீல் அகமது, குல்தீப் யாதவ், இஷாந்த் சர்மா, ஜேய் ரிச்சர்ட்சன், ரசிக் சலேம் தார்

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை