ஆஸ்திரேலிய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நாளை (ஜனவரி 29) கலேவில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடருக்கான இரு அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகியும் வருகின்றனர். 

Advertisement

இதில் ஆஸ்திரேலிய அணி ஏற்கெனவே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள நிலையில், இப்போட்டியை எதிர்கொள்கிறது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.. இந்நிலையில், இப்போட்டியில் விளையாடவுள்ள ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் மார்ஷ் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பு சாதனை ஒன்றை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். 

Advertisement

700 சர்வதேச விக்கெட்டுகள்

அந்தவகையில் இப்போட்டியில் மிட்செல் ஸ்டார்க் ஒரு விக்கெட்டை வீழ்த்தினால், 147 ஆண்டுகால வரலாற்றில் சர்வதேச கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகளை வீழ்த்திய நான்காவது ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் என்ற பெருமையைப் பெறுவார். ஸ்டார்க் இதுவரை விளையாடிய 286 போட்டிகளில் 372 இன்னிங்ஸ்களில் விலையாடி 699 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்காக ஷேன் வார்ன் (999), கிளென் மெக்ராத் (948) மற்றும் பிரட் லீ (718) ஆகியோர் மட்டுமே இதற்கு முன் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது

முரளிதரனை பின்னுக்கு தள்ளும் வாய்ப்பு.

இலங்கைக்கு எதிராக விளையாடிய 9 டெஸ்ட் போட்டிகளில் மிட்செல் ஸ்டார்க் 51 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்தப் போட்டியில் ஸ்டார்க் மேற்கொண்டு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினால், ஆஸ்திரேலியா-இலங்கை டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்து வீச்சாளர்கள் பட்டியலில் முத்தையா முரளிதரனை முந்தி மூன்றாவது இடத்தைப் பிடிப்பார். இதற்கு முன் முத்தையா முரளிதரன் 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 54 விக்கெட்டுகளை வீழ்த்தி மூன்றாம் இடத்தில் உள்ளார். இந்தப் பட்டியலில் இலங்கை அணியின் ரங்கனா ஹெராத் (66) முதலிடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னே (59) இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.

Advertisement

டெஸ்ட் கிரிக்கெட்டில் 50 சிக்ஸர்கள்

இதுதவிர்த்து இந்த டெஸ்ட் போட்டியில் மிட்செல் ஸ்டார்க் பேட்டிங்கில் இரண்டு சிக்ஸர்களை அடிக்கும் பட்சத்தில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 50ஆவது சிக்ஸரை பூர்த்தி செய்வார். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணிக்காக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 50 சிக்ஸர்களை அடித்த 7ஆவது வீரர் எனும் பெருமையை மிட்செல் ஸ்டார்க் பெறுவார். இதுவரை அவர் 137 இன்னிங்ஸ்களில் 48 சிக்ஸர்கள் அடித்துள்ளார். அதேசமயம் இதற்கு முன் ஆடம் கில்கிறிஸ், மேத்யூ ஹைடன், ரிக்கி பாண்டிங், டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், மற்றும் பிராட் ஹைடன் ஆகியோர் மட்டுமே இந்த மைல் கல்லை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி: ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), சீன் அபோட், ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கூப்பர் கன்னொலி, டிராவிஸ் ஹெட் (துணை கேப்டன்), ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, சாம் கோன்ஸ்டாஸ், மேத்யூ குஹ்னெமன், மார்னஸ் லாபுஷாக்னே, நாதன் லையன், நாதன் மெக்ஸ்வீனி, டாட் மர்ஃபி, மிட்செல் ஸ்டார்க், பியூ வெப்ஸ்டர்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News