மேஜர் லீக் கிரிக்கெட் 2025: சான் ஃபிரான்ஸிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஃபாஃப் டூ பிளெசிஸ் சதமடித்ததன் மூலம் டி20 கிரிக்கெட்டில் தனித்துவ சாதனையைப் படைத்துள்ளார்.

Advertisement

எம்எல்சி தொடரில் இன்று நடைபெற்ற 10ஆவது லீக் போட்டியில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் மற்றும் சான் ஃபிரான்ஸிகோ யூனிகார்ன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சூப்பர் கிங்ஸ் அணி 198 ரன்களைச் சேர்த்த நிலையில், பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய யூனிகார்ன்ஸ் அணி 16.1 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.

Advertisement

இந்நிலையில் சான் ஃபிரான்ஸிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிக்கு எதிராக போட்டியில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனும் அதிரடி பேட்ஸ்மேனுமான ஃபாஃப் டு பிளெசிஸ் சதம் அடித்து வரலாறு படைத்தார். இப்போட்டியில் டூ பிளெசிஸ் 51 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்சர்களுடன் 100 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் ஆடவர் டி20 கிரிக்கெட்டில் சதம் அடித்த மூன்றாவது வயதான வீரர் என்ற பெருமையை பிளெசிஸ் பெற்றுள்ளார்.

அவர் 40 வயது 342 நாட்களில் இந்த சாதனையை படைத்துள்ளார். இந்தப் பட்டியலில், 39 வயது 208 நாட்களில் சதம் அடித்த இலங்கையின் மகேலா ஜெயவர்தனேவை அவர் முந்தினார். இந்த பட்டியலில் இங்கிலாந்தின் பால் காலிங்வுட் 41 வயது 65 நாள்களில் சதமடித்து முதலிடத்திலும், இங்கிலாந்தின் கிரேம் ஹிக் 41 வயது 37 நாள்களில் சதமடித்து இரண்டாம் இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கர்ஹு. 

டி20 கிரிக்கெட்டில் சதமடித்த அதிக வயதுடைய வீரர்கள்

  • 41 வயது 65 நாள் - பால் கோலிங்வுட் (டர்ஹாம்) vs வொர்செஸ்டர்ஷயர், 2017
  • 41 வயது 37 நாள் - கிரேம் ஹிக் (வொர்செஸ்டர்ஷயர்) vs நார்தாம்ப்டன்ஷயர், 2007
  • 40 வயது 342 நாள் - ஃபாஃப் டு பிளெசிஸ் (டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ்) vs சான் ஃபிரான்ஸிஸ்கோ யூனிகார்ன் 2025

Also Read: LIVE Cricket Score

Advertisement

இதுதவிர்த்து டி20 கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்க அணிக்காக அதிக சதங்களை அடித்த வீரர்கள் வரிசையில் ஃபாஃப் டு பிளெசிஸ் கூட்டாக இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். இது டூ பிளெசிஸின் 7ஆவது டி20 சதமாகும். இதன்மூலம் அவர் குயின்டன் டி காக்கின் சாதனையை சமன்செய்து அசத்தியுள்ளார். இந்த பட்டியலில் ரைலீ ரூஸ்வோ 9 சதங்களை அடித்து முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News