MLC 2025: எம்ஐ நியூயார்க் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சதமடித்ததன் மூலம் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியின் ரோஹித் சர்மா சாதனையை முறியடித்து அசத்தியுள்ளார். 

Advertisement

எம்எல்சி தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் மற்றும் எம்ஐ நியூயார்க் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் முதலில் பேட்டிங்  செய்த சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் 103 ரன்களையும், டோனவன் ஃபெரீரா 53 ரன்களையும் சேர்க்க, அந்த அணி அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 223 ரன்களைச் சேர்த்தது. நியூயார்க் தரப்பில் ஜார்ஜ் லிண்டே, ருஷில் உகர்கர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

Advertisement

பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய எம்ஐ நியூயார்க் அணியில் அதிகபட்சமாக கீரன் பொல்லர்ட் 70 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் யாரும் பெரிதளவில் சோபிக்க தவறினர். இதன் காரணமாக எம்ஐ நியூயார்க்  அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்களை மட்டுமே சேர்த்தது. சூப்பர் கிங்ஸ் தரப்பில் அகீல் ஹொசைன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் சூப்பர் கிங்ஸ் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் நியூயார்க் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்நிலையில் இப்போட்டியில் சதமடித்து அசத்திய ஃபாஃப் டூ பிளெசிஸ் சதமடித்து அசத்தியதன் மூலம் சில சாதனைகளையும் படைத்துள்ளார். அந்தவகையில் இது டூ பிளெசிஸின் 8ஆவது டி20 சதமாகும். இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் டூ பிளெசிஸ் கூட்டாக 4ஆம் இடத்தைப் பிடித்துள்ளார். இதன் மூலம் அவர் ரோஹித் சர்மா, கிளென் மேக்ஸ்வெல், டேவிட் வார்னர் ஆகியோரது சாதனையை சமன்செய்துள்ளார்.

அவருக்கு முன் ரோஹித் சர்மா, கிளென் மேக்ஸ்வெ, ஆரோன் ஃபிஞ்ச், மைக்கேல் கிளிங்கர், ஜோஸ் பட்லர் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் தலா 8 சதங்களை அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் தென் ஆப்பிரிக்க அணியின் ரைலீ ரூஸோவ், விராட் கோலி ஆகியோர் 9 சதங்களுடன் மூன்றாம் இடத்திலும், பாகிஸ்தானின் பாபர் ஆசாம் 11 சதங்களுடன் இரண்டாம் இடத்திலும், வெஸ்ட் இண்டீஸின் கிறிஸ் கெயில் 22 சதங்களுடன் முதலிடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read: LIVE Cricket Score

Advertisement

இது தவிர்த்து மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் வரலாற்றில் அதிக சதங்கள் அடித்த வீரராகவும் ஃபாஃப் டூ பிளெசிஸ் சாதனை படைத்துள்ளார். அந்தவகையில் இத்தொடரில் ஃபாஃப் டூ பிளெசிஸ் அடிக்கும் மூன்றாவது சதம் இதுவாகும், அதிலும் நடப்பு தொடரில் இது அவரது இரண்டாவது சதமாகும். இந்த போட்டியில் நிக்கோலஸ் பூரன் மற்றும் ஃபின் ஆலன் ஆகியோர் தலா இரண்டு சதங்களை எடித்து இரண்டாம் இடத்தில் உள்ளனர். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News