MLC 2025 Eliminator: சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸுக்கு எதிரான எலிமினேட்டர் சுற்று போட்டியில் எம்ஐ நியூயார்க் அணி வெற்றி பெற்றதுடன் சேலஞ்சர் சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. 

Advertisement

மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் மேத்யூ ஷார்ட் தலைமையிலான சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் மற்றும் நிக்கோலஸ் பூரன் தலைமையிலான எம்ஐ நியூயார்க் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டல்லாஸில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த யூனிகார்ன்ஸ் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் கேப்டன் மேத்யூ ஷார்ட் 6 ரன்களிலும், டிம் செஃபெர்ட் ஒரு ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். 

Advertisement

அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் 4 ரன்களிலும், சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி 5 ரன்னிலும், ஹசான் கான் ரன்கள் ஏதுமின்றியும், ஹம்மத் அசாம் 11 ரன்னிலும், கூப்பர் கன்னொலி 23 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியில் சேவியர் பார்ட்லெட் 44 ரன்களையும், பிராடி கோச் 19 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் யூனிகார்ன்ஸ் அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 131 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நியூயார்க் அணி தரப்பில் ருஷில் உகர்கர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய நியூயார்க் அணிக்கு மொனாங்க் படேல் மற்றும் குயின்டன் டி கான் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 43 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் குயின்டன் டி காக் 33 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் நிக்கோலஸ் பூரன் ஒரு ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். அவர்களைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான மொனாங்க் படேலும் 33 ரன்களில் ஆட்டமிழாந்தார். 

Also Read: LIVE Cricket Score

பின்னர் களமிறங்கிய மைக்கேல் பிரேஸ்வெல் 18 ரன்களுக்கும், கீரன் பொல்லார்ட், தஜிந்தர் தில்லான், ஹீத் ரிச்சர்ட்ஸ், டிரிஸ்டன் லூஸ் உள்ளிட்டோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில் டிரென்ட் போல்ட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 22 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் எம்ஐ நியூயார்க் அணி 19.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுட 2 விக்கெட் வித்தியாசத்தில் யூனிகார்ன்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. இந்த வெற்றியின் மூலம் எம்ஐ நியூயார்க் அணி நடப்பு எம்எல்சி தொடரின் சேலஞ்சர் சுற்றுக்கு முன்னேறியுள்ளது

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News