MLC 2025: வாஷிங்டன் ஃப்ரீடம் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் எம்ஐ நியூயார்க் அணி வெற்றி பெற்றதுடன் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் தங்களுடைய முதல் சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியுள்ளது. 

Advertisement

மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டி வரும் நிலையில், இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் வாஷிங்டன் ஃப்ரீடம் மற்றும் எம்ஐ நியூயார்க் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற வாஷிங்டன் ஃப்ரீடம் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய எம்ஐ நியூயார்க் அணிக்கு மொனாங்க் படேல் மற்றும் குயின்டன் டி காக் இணை அதிரடியான தொடக்கத்தை வழங்கினர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 72 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் மொனாங்க் படேல் 28 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

Advertisement

அதன்பின் களமிறங்கிய தஜிந்தர் தில்லான் 14 ரன்களுக்கும், கேப்டன் நிக்கோலஸ் பூரன் 21 ரன்னிலும் ஆட்டமிழக்க, அரைசதம் கடந்து விளையாடி வந்த குயின்டன் டி காக் 6 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 77 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்களில் குன்வர்ஜீத் சிங் 22 ரன்களைச் சேர்க்க எம்ஐ நியூயார்க் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்களைச் சேர்த்தது. வாஷிங்டன் ஃப்ரீடம் அணி தரப்பில் லோக்கி ஃபெர்குசன் 3 விக்கெட்டுகளையும், நேத்ராவல்கர், மேக்ஸ்வெல், ஜேக் எட்வர்ட்ஸ், ஹொலண்ட் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய வாஷிங்டன் ஃப்ரீடம் அணியில் மிட்செல் ஓவன் மற்றும் ஆண்ட்ரிஸ் கஸ் ஆகியோர் அடுத்தடுத்து ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் இணைந்த ரச்சின் ரவீந்திரா - ஜேக் எட்வர்ட்ஸ் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் விக்கெட் இழப்பை தடுத்ததுடன் ஸ்கோரையும் சீரான வேகத்தில் உயர்த்தினர். இதில் ரச்சின் ரவீந்திரா அரைசதம் கடந்தும் அசத்தினார். அதன்பின் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 33 ரன்களுக்கும், ரச்சின் ரவீந்திரா 8 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 70 ரன்களிலும் என ஆட்டமிழந்தனர். 

Also Read: LIVE Cricket Score

பின்னர் களமிறங்கிய கிளென் பிலீப்ஸ் இறுதிவரை களத்தில் இருந்ததுடன் 5 சிக்ஸர்களுடன் 48 ரன்களைச் சேர்த்த நிலையிலும், வாஷிங்டன் ஃப்ரீடம் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. நியூயார்க் அணி தரப்பில் ட்ரென்ட் போல்ட் மற்றும் ருஷில் உகர்கர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் வாஷிங்டன் ஃப்ரீடம் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வாஷிங்டன் ஃப்ரீடம் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டத்தையும் வென்று சாதனை படைத்துள்ளது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News