அமெரிக்காவில் தொடங்கப்பட்டுள்ள மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 9ஆவது லீக் ஆட்டத்தில் லாஸ் ஏஞ்சலஸ் நைட் ரைடர்ஸ் - வாஷிங்டன் ஃப்ரீடம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற வாஷிங்டன் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

Advertisement

அதன்படி களமிறங்கிய நைட் ரைடர்ஸ் அணியில் ஜேசன் ராய் 7, உன்முகுந்த் சந்த் 18, குமார் 9, ஜஸ்கரன் மல்ஹோத்ரா 12 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் இணைந்த ரைலீ ரூஸோவ் - ஆண்ட்ரே ரஸல் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். 

Advertisement

இதில் ரூஸோவ் 41 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மறுமுனையில் அரைசதம் கடந்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஆண்ட்ரே ரஸல் 6 பவுண்டரி, 6 சிக்சர்கள் என 71 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்களைச் சேர்த்தது. 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய வாஷிங்டன் அணிக்கு மேத்யூ ஷார்ட் - ஆண்ட்ரிஸ் கஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தனர். இதில் கஸ் 40 ரன்களுக்கும், ஷார்ட் 43 ரன்காளுக்கும் ஆட்டமிழக்க, அடுத்து வந்த முக்தார் அஹ்மத், கிளென் பிலீப்ஸ் இணை சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து நடையைக் கட்டினர். 

அதன்பின் வந்த கேப்டன் ஹென்ரிக்ஸ் - பியோனர் இணை இறுதிவரை களத்தில் இருந்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் வாஷிங்டன் ஃப்ரீடம் அணி 18.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 6 விக்கெட் வித்தியாசத்தில் லாஸ் ஏஞ்சலஸ் நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News