சமீப காலமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமானது அடுத்தடுத்த தோல்விகளைச் சந்தித்து வருவதன் காரணமாக கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. இதனால் நாளுக்கு நாள் அந்த அணியின் நட்சத்திர வீரர்கள், கேப்டன்கள் மீதான விமர்சனங்களும் அதிகரித்தன. இந்நிலையில் பாகிஸ்தானின் ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கான கேப்டன் பதிவியில் இருந்து விலகுவதாக நட்சத்திர வீரர் பாபர் ஆசாம் சமீபத்தில் அறிவித்தார்.

Advertisement

முன்னதாக, கடந்தாண்டு நடந்து முடிந்த ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியானது லீக் சுற்றுடனே வெளியேறி ஏமாற்றமளித்தது. இத்தோல்விக்கு பொறுபேற்கும் வகையில் அணியை கேப்டனாக வழிநடத்திய பாபர் ஆசாம் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலுகுவதாக அறிவித்தார். இதையடுத்து டெஸ்ட் அணிக்கு ஷான் மசூத்தும், டி20 அணிக்கு ஷாஹீன் அஃப்ரிடியும் தேர்வுசெய்யப்பட்டனர். ஆனால் இவர்களது தலைமையிலும் பாகிஸ்தான் அணியானது அடுத்தடுத்த தோல்விகளையே சந்தித்து வந்தது.

Advertisement

இதனால் இந்தாண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாபர் ஆசாம் மீண்டும் கேப்டன் பதவியை ஏற்றார். ஆனால் நடந்து முடிந்த இந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலும் அடுத்தடுத்த தோல்விகளைச் சந்தித்த பாகிஸ்தான் அணியானது லீக் சுற்றிலேயே வெளியேறி ஏமாற்றமளித்தது. இதனால் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இந்நிலையில் அவர் தனது கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக சமூக வலைதள பதவின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.  இதனையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அந்த அணியின் புது கேப்டனை தேர்வுசெய்யும் முனைப்பில் இறங்கியது.

இந்நிலையில், தற்போது ஆஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வேவில் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. மேலும் இத்தொடருக்கான பாகிஸ்தான் அணியையை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்தது. அதன்படி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர்கள் பாபர் ஆசாம், ஷாஹின் அஃப்ரிடி, நசீம் ஷா அகியோர் மீண்டும் அணிக்கு திரும்பவுள்ளனர். ஆனால் ஜிம்பாப்வே தொடரில் இவர்கள் மூவருக்கும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

மேற்கொண்டு இத்தொடர்களுக்கான பாகிஸ்தான் அணியில் அறிமுக வீரர்கள் காம்ரன் குலாம், ஒமைர் யுசூஃப், சுஃபியான் மோகிம் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஒருநாள் தொடர்களுக்கான பாகிஸ்தான் அணியில் அமீர் ஜமால், அராபத் மின்ஹாஸ், பைசல் அக்ரம், ஹசிபுல்லா, முஹம்மது இர்பான் கான் மற்றும் சாம் அயூப் ஆகியோருக்கும் முதல் முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர்த்து ஆகா சல்மான், ஜஹான்தத் கான் அகியோர் டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இருப்பினும் இத்தொடர்களுக்கான பாகிஸ்தான் அணிக்கு கேப்டன் யார் என்பது அறிவிக்கபடாமல் இருந்தது.

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

இந்நிலையில் பாகிஸ்தான் அணி ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாக நட்சத்திர வீரர் முகமது ரிஸ்வானையும், துணைக்கேப்டனாக சல்மான் அலி அகாவும் நியமிக்கப்ப்ட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. முன்னதாக பாகிஸ்தான் அணியின் அடுத்த கேப்டனாக ஃபகர் ஸமான் அல்லது முகமது ரிஸ்வான் ஆகியோரை தேர்ந்தெடுக்க படாலாம் என தகவல்கள் வெளியான நிலையில் தற்சமயம் முகமது ரிஸ்வான் தான் அடுத்த கேப்டன் என்பதை அறிவித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News