ஐசிசி உலகக்கோப்பை 2023: அதிக ரன், விக்கெட்டுகள், சிக்சர்கள் விளாசிய வீரர்கள் பட்டியல்!

Updated: Mon, Nov 20 2023 15:11 IST
Image Source: Google

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் மீண்டும் இந்திய அணியை  வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி 6ஆவது முறையாக (1987, 1999, 2003, 2007, 2015) உலகக் கோப்பையைக் கைப்பற்றி, வரலாற்றை மாற்றி எழுதியது. முன்னதாக, முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 240 ரன்களை எடுத்தது இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 54 ரன்களும், கே.எல்.ராகுலும் 66 ரன்களும் எடுத்தனர். பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி, 43 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் எடுத்து 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அவ்வணியில் டிராவிஸ் ஹெட் 137 ரன்களும், லபுசேன் 58* ரன்களும் எடுத்தனர்.

இந்திய அணி இறுதிப்போட்டியில் தோல்வியைத் தழுவியிருந்தாலும், இந்த தொடரில் சிறப்பாகவே விளையாடி, ரசிகர்களுக்கு நல்ல விருந்து படைத்து வந்தது. இதன்மூலம் இந்திய வீரர்கள்தான் நடப்புத் தொடரில் பல மகத்தான சாதனைகளைப் படைத்துள்ளனர். அதன்படிநடப்பு உலகக்கோப்பைத் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். அவர், 3 சதம், 6 அரைசதங்களுடன் 765 ரன்கள் எடுத்துள்ளார். தவிர, ஓர் உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களிலும் இவரே முதலிடத்தில் உள்ளார்.

மேலும், இந்த தொடரில் அதிக பவுண்டரி அடித்த வீரர்களில் விராட் கோலியே முதல் இடத்தில் உள்ளார். அவர் 68 பவுண்டரிகள் அடித்துள்ளார். ரோஹித் சர்மா 66 பவுண்டரிகளுடன் 2ஆவது இடத்தில் உள்ளார். நடப்பு உலகக்கோப்பைத் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலிலும் 2ஆவது இடத்தில் இந்திய வீரரே இடம்பிடித்துள்ளார். இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, 1 சதம், 3 அரைசதங்களுடன் 597 ரன்கள் எடுத்துள்ளார்.

அத்துடன், நடப்பு உலகக்கோப்பை தொடரில் அதிக சிக்ஸர் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோஹித் சர்மாவே முதலிடத்தில் உள்ளார். அவர் இத்தொடரில் 31 சிக்ஸர்களளை விளாசியுள்ளார். நடப்பு உலகக்கோப்பைத் தொடரில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய பவுலர்கள் வரிசையிலும் இந்திய வீரர் முகமது ஷமி 24 விக்கெட்களை வீழ்த்தி முதல் இடத்தைப் பிடித்துள்ளார். மேலும் நடப்பு உலகக்க்கோப்பை தொடரில் அதிக சதங்களை விளாசிய வீரர் பட்டியளில் தென் ஆப்பிரிக்காவின் குயின்டன் டி காக் 4 சதங்களுடன் முதலிடம் பிடித்துள்ளார். தொடரின் அதிபட்ச தனி நபர் ஸ்கோரை ஆஸ்திரேலியாவின் கிளென் மேக்ஸ்வெல் (201*) பதிவுசெய்துள்ளார். 

உலகக்கோப்பை 2023-இன் புள்ளிவிவரங்கள்

  •      அதிக ரன்களை எடுத்த வீரர்: விராட் கோலி, இந்தியா (765 ரன்கள்)
  •      அதிக விக்கெட் வீழ்த்தியவர்: முகமது ஷமி, இந்தியா (24 விக்கெட்)
  •      அதிகபட்ச ஸ்ட்ரைக் ரேட் : கிளென் மேக்ஸ்வெல், ஆஸ்திரேலியா (150.18 ஸ்ட்ரைக் ரேட்)
  •      அதிகபட்ச பேட்டிங் சராசரி : விராட் கோலி, இந்தியா (95.62)
  •      அதிக அரைசதங்கள்: விராட் கோலி, இந்தியா (9 அரைசதங்கள்)
  •      அதிவேக அரைசதம்: டிராவிஸ் ஹெட், ஆஸ்திரேலியா (25 பந்துகள்)
  •      அதிக சதங்கள்: குயின்டன் டி காக், தென் ஆப்பிரிக்கா (4 சதங்கள்)
  •      அதிவேக சதம்: கிளென் மேக்ஸ்வெல், ஆஸ்திரேலியா (40 பந்துகள்)
  •      அதிக பவுண்டரிகள்: விராட் கோலி, இந்தியா (68 பவுண்டரிகள்)
  •      அதிக சிக்ஸர்கள்: ரோஹித் சர்மா, இந்தியா (31 சிக்ஸர்கள்)
  •      அதிக கேட்சுகள்: டேரில் மிட்செல், நியூசிலாந்து (11 கேட்ச்கள்)
  •      ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள்: ஃபகார் ஜமான், பாகிஸ்தான் (11)
  •      ஒரு இன்னிங்ஸில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர்: கிளென் மேக்ஸ்வெல், ஆஸ்திரேலியா (201 நாட் அவுட்)
  •      ஒரு இன்னிங்ஸில் சிறந்த பந்துவீச்சு: முகமது ஷமி, இந்தியா (7/57)
  •      அதிகபட்ச ரன்களை எடுத்த அணி: தென் ஆப்பிரிக்கா (428/5)
  •      குறைந்தபட்ச ரன்களை எடுத்த அணி: இலங்கை (55 ஆல்-அவுட்)
  •      இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்றவர்: டிராவிஸ் ஹெட், ஆஸ்திரேலியா (137 ரன்கள்)
  •      தொடர் நாயகன் விருதை வென்றர்: விராட் கோலி, இந்தியா
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை