Mushfiqur Rahim World Record: இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூலம் வங்கதேச அணியின் அனுபவ வீரர் முஷ்ஃபிக்கூர் ரஹிம் சர்வதேச கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார். 

Advertisement

இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கலே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வரும் வங்கதேச அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்த நிலையிலும் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ மற்றும் முஷ்ஃபிகூர் ரஹிம் அகியோரின் அபாரமான சதங்கள் காரணமாக முதல்நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 292 ரன்களைச் சேர்த்தது.

Advertisement

இதையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 148 ரன்களைச் சேர்த்த கையோடு விக்கெட்டை இழக்க, மறுபக்கம் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் முஷ்ஃபிக்கூர் ரஹிம் 150 ரன்களைக் கடந்தார். அதேசமயம் அவருடன் இணைந்த லிட்டன் தாஸும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடக்க, வங்கதேச அணியின் ஸ்கோரும் 420 ரன்களைக் கடந்துள்ளது. 

இந்நிலையில் இப்போட்டியில் சதமடித்து அசத்தியுள்ள முஷ்ஃபிக்கூர் ரஹிம் கிரிக்கெட் வரலாற்றில் தனித்துவ சாதனை ஒன்றையும் படைத்துள்ளார். அதன்படி சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு பந்து கூட வீசாமல் அதிக சர்வதேச ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை முஷ்ஃபிக்கூர் ரஹிம் பெற்றுள்ளார். அவர் இந்த இன்னிங்ஸில் 112வது ரன் எடுத்தவுடன் இந்த மைல்கல்லை எட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தப் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆடம் கில்கிறிஸ்டின் சாதனையை முஷ்ஃபிக்கூர் ரஹிம் முறியடித்தார். கில்கிறிஸ்ட் தனது சர்வதேச வாழ்க்கையில் ஒருபோதும் பந்து வீசியதில்லை. அவ்வாறு அவ்ர் 396 போட்டிகளில் 15461 ரன்கள் எடுத்ததே சாதனயாக இருந்த நிலையில் தற்சமயம் முஷ்ஃபிக்கூர் ரஹிம் 473 போட்டிகளில் 15480 ரன்களைச் சேர்த்து புதிய சாதனையை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Also Read: LIVE Cricket Score

Advertisement

சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு பந்து கூட வீசாமல் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள்

  • முஷ்பிகுர் ரஹீம்: 15480 ரன்கள் (473 போட்டிகள்)
  • ஆடம் கில்கிறிஸ்ட்: 15461 ரன்கள் (396 போட்டிகள்)
  • குயின்டன் டி காக்: 12654 ரன்கள் (301 போட்டிகள்)
  • ஜோஸ் பட்லர்: 11881 ரன்கள் (384 போட்டிகள்)
  • ஜானி பேர்ஸ்டோவ்: 11581 ரன்கள் (287 போட்டிகள்)

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News