இந்தியா- வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்து இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.

Advertisement

அதன்படி இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 376 ரன்களை குவித்து ஆல் அவுட்டானது.  இந்திய அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 114 ரன்களையும், ரவீந்திர ஜடேஜா 86 ரன்களையும் சேர்த்தனர். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணியானது  பும்ரா மற்றும் அர்ஷ்தீப் ஆகியோரின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 149 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.

Advertisement

இதைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்களை குவித்திருந்த நிலையில் டிக்ளர் செய்வதாக அறிவித்தது. இதில் அதிகபட்சமாக ஷுப்மன் கில் 119 ரன்களையும், ரிஷப் பந்த் 109 ரன்களையும் சேர்த்திருந்தனர். இடஹ்ன்மூலம் வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்காகவும் நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் கடின இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணியில் ஸகிர் ஹசன் 33 ரன்களுக்கும், சாத்மான் இஸ்லாம் 35 ரன்களிலும் விக்கட்டை இழந்தனர். 

பின்னர் களமிறங்கிட கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ அரைசதம் கடந்த நிலையில், மறுபக்கம் விளையாடிய மொமினுல் ஹக், முஷ்ஃபிக்கூர் ரஹிம் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். பின்னர் மைதானத்தில் போதிய வெளிச்சம் இல்லாததால் முன்கூட்டியே 3ஆம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. அதன்படி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 158 ரன்களைச்ச் சேர்த்துள்ளது. 

இந்நிலையில் இப்போட்டியில் வங்கதேச அணியின் மூத்த வீரர் முஷ்பிக்கூர் ரஹிம் இரண்டு இன்னிங்ஸிலும் பெரிதளவில் சோபிக்க தவறினாலும், அந்த அணிக்காக வரலாற்று சாதனை ஒன்றை படைத்து அசத்தியுள்ளார். அதன்படி வங்கதேச அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்களை விளாசிய வீரர் எனும் தமிம் இக்பாலின் சாதனையை முறியடித்து முஷ்ஃபிக்கூர் ரஹிம் புதிய சாதனையைப் படைத்துள்ளார். 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

முன்னதாக தமிம் இக்பால் 387 போட்டிகளில் 25 சதம், 94 அரைசதங்களுடன் 15,192 ரன்களை அடித்ததே சாதனையாக இருந்த நிலையில், முஷ்ஃபிக்கூர் ரஹீம் 464 போட்டிகளில் 20 சதம் 82 அரைசதங்கள் என 15,205 ரன்களைக் குவித்து முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். மேற்கொண்டு இந்த பட்டியலில் அந்த அணியின் அனுபவ வீரர் ஷாகிப் அல் ஹசன் 446 போட்டிகளில் 14,701 ரன்களுடன் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News