வங்கதேச அணியானது தற்சமயம்  ஆஃப்கானிஸ்தான் அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடந்து முடிந்த முதலிரண்டு ஒருநாள் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து, ஒருநாள் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்துள்ளன. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது போட்டி நாளை ஷார்ஜாவில் நடைபெறவுள்ளது.

Advertisement

இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ, அந்த அணி தொடரை வெல்லும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இதனைத்தொடர்ந்து வங்கதேச அணியானது அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரிலும் விளையாடவுள்ளது.

Advertisement

இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் நவம்பர் 22ஆம் தேதியும், ஒருநாள் தொடரானது டிசம்பர் 8ஆம் தேதி முதலும் டி20 தொடரானது டிசம்பர் 15ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது. இந்நிலையில் குழந்தை பிறப்பின் காரணமாக எதிர்வரும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து வங்கதேச அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முஸ்தஃபிசூர் ரஹ்மான் விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலின் படி, முஸ்தஃபிசூர் ரஹ்மான் தனது குழந்தை பிறப்பின் காரணமாக எதிர்வரும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில் இருந்து விடுப்பு எடுப்பதாக வங்கதேச கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஆஃப்கானிஸ்தான் தொடர் முடிந்த பின் இது குறித்து ஆலோசித்து அதன்பின் இறுதி முடிவை வங்கதேச கிரிக்கெட் வாரியம் அறிவிக்கும் என்றும் கூறப்படுகிறது. 

ஒருவேளை முஸ்தஃபிசூர் ரஹ்மான் விலகும் பட்சத்தில் அது வங்கதேச அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக காயம் காரணமாக வங்கதேச அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் முஷ்ஃபிக்கூர் ரஹிமும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து விலகினார். அதன்படி, ஆஃப்கானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஏற்பட்ட காயம் காரணமாக முஷ்ஃபிக்கூர் ரஹீம் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்து விலகியதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

மேற்கொண்டு முஷ்ஃபிக்கூர் ரஹிமிற்கு ஏற்பட்டுள்ள காயம் குணமடைய குறைந்தது 6 முதல் 7 வாரங்கள் தேவைப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒருவேளை அப்படி நடக்கும் பட்சத்தில் அவர் அடுத்ததாக நடைபெறவுள்ள வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் பங்கேற்கமாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் வங்கதேச அணி தொடருக்கு முன்னதாகவே பின்னடைவை சந்தித்துள்ளதாக பார்க்கப்படுகிறது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News