1st Test, Day 1: சதமடித்து மிரட்டிய நஜ்முல், முஷ்ஃபிக்கூர்; வலிமையான நிலையில் வங்கதேச அணி!

Updated: Tue, Jun 17 2025 20:07 IST
Image Source: Google

Sri Lanka vs Bangladesh: இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வரும் வங்கதேச அணியில் நஜ்முல் ஹொசைன் சாண்டோ-முஷ்ஃபிகூர் ரஹீம் ஆகியோர் சதமடித்து அசத்தியுள்ளனர். 

இலங்கையில் சுற்றுப்பயணம் செய்தும் வரும் வங்கதேச அணி தற்சமயம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது கலே கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்கிய நிலையில், டாஸ் வென்ற வங்கதேச அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்த்து. இதையடுத்து களமிறங்கிய அந்த அணிக்கு ஷாத்மான் இஸ்லாம் மற்றும் அனாமுல் ஹக் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அனமுல் ஹக் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். 

பின்னர் ஷாத்மானுடன் இணைந்த மொமினுல் ஹக் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார். இதில் ஷாத்மான் இஸ்லாம் 14 ரன்களிலும், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மொமினுல் ஹக் 29 ரன்னிலும் என அடுத்தடுத்து தரிந்து ரத்நாயக்க பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் அந்த அணி 45 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய சூழ்நிலையில் ஜோடி சேர்ந்த கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ மற்றும் முஷ்ஃபிக்கூர் ரஹீம் இணை அணியை சரிவிலிருந்து மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கினர். 

இருவரும் இணைந்து அபாரமாக விளையாடியதுடன் மேற்கொண்டு விக்கெட்டுகள் ஏதும் இழக்காமல் ஸ்கோரையும் உயர்த்தினர். இதில் நஜ்முல் ஹொசைன் சாண்டோ தனது 6அவது சர்வதேச டெஸ்ட் சதத்தையும், முஷ்ஃபிக்கூர் ரஹிம் 12ஆவது டெஸ்ட் சதத்தையும் பூர்த்தி செய்து அசத்தியதுடன், 4ஆவது விக்கெட்டிற்கு 247 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தியுள்ளனர். இதன்மூலம் முதல்நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி 3 விக்கெட்டுகளை மட்டுமெ இழந்து 292 ரன்களைக் குவித்துள்ளது. இதில் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 136 ரன்களுடன் களத்தில் உள்ளார். 

Also Read: LIVE Cricket Score

மறுபக்கம் முஷ்ஃபிக்கூர் ரஹிம் 105 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இலங்கை அணி தரப்பில் அறிமுக வீர்ர் தரிந்து ரத்நாயக்க 2 விக்கெட்டுகளையும், அசிதா ஃபெர்னாண்டோ ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை