Advertisement

Netherlands vs Nepal Dream11 Prediction, T20 World Cup 2024: ஐசிசி நடத்தும் 9ஆவது ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நாளை நடைபெறும் 7ஆவது லீக் ஆட்டத்தில் குரூப் டி பிரிவில் இடம்பிடித்துள்ள நெதர்லாந்து மற்றும் நேபாள் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளும் சமீப காலங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதுடன், இரு அணிகளிலும் அதிரடியாக விளையாடக்கூடிய வீரர்களும் இருப்பதால் நிச்சயம் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement

NED vs NEP : போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - அமெரிக்கா vs கனடா
  • இடம் - கிராண்ட் ப்ரேரி மைதானம், டல்லாஸ்
  • நேரம் - காலை 6 மணி (இந்திய நேரப்படி)

NED vs NEP: Pitch Report

கிராண்ட் ப்ரேரி மைதானமானது சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான மைதானமாக அறியப்படுகிறது. இதன் காரணமாக இங்கு இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்வதற்கு சிறப்பானதாக இருக்கும். இந்த மைதானத்தில் நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் கூட கனடா அணி நிர்ணயித்த 195 ரன்கள் என்ற இலக்கை அமெரிக்க அணி எளிதாக எட்டியுள்ளது. இதன் காரணமாக டாஸ் வெல்லும் கேப்டன் சேஸிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம். 

NED vs NEP T20I Head to Head

  • மோதிய போட்டிகள் - 12
  • நெதர்லாந்து - 06
  • நேபாள் - 05
  • முடிவில்லை - 01

NED vs NEP: Live Streaming Details

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளையும் இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க ஆசைப்படும் ரசிகர்கள் டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் இத்தொடரை நேரலையில் காணலாம். 

Advertisement

Netherlands vs Nepal Probable Playing XI

நெதர்லாந்து : மைக்கேல் லெவிட், மேக்ஸ் ஓ'டவுட், விக்ரம்ஜீத் சிங், பாஸ் டி லீட், ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன்), வெஸ்லி பரேசி, டிம் பிரிங்கிள், லோகன் வான் பீக், பால் வான் மீகெரென், ஆர்யன் தத், விவியன் கிங்மா.

நேபாள்: குஷால் புர்டெல், ஆசிஃப் ஷேக், ரோஹித் குமார் (கேப்டன்), தீபேந்திர சிங் ஐரி, சந்தீப் ஜோரா, குஷால் மல்லா, குல்ஷன் ஜா, சோம்பால் கமி, கரண் கேசி, லலித் ராஜ்பன்ஷி, அவினாஷ் போஹ்ரா.

Advertisement

NED vs NEP T20 World Cup Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - ஆசிஃப் ஷேக், ஸ்காட் எட்வர்ட்ஸ்
  • பேட்ஸ்மேன்கள் – மேக்ஸ் ஓ டவுட், குஷால் புர்டெல், ரோஹித் குமார்
  • ஆல்-ரவுண்டர்கள் - லோகன் வான் பீக், தீபேந்திர சிங் ஐரி (துணை கேப்டன்), பெஸ் டி லீட் (கேப்டன்)
  • பந்துவீச்சாளர்கள் - பால் வான் மீகெரென், சோம்பால் காமி, ஆர்யன் தத்.

NED vs NEP Dream11 Prediction, T20 World Cup 2024, Today Match NED vs NEP, NED vs NEP Dream11 Team, Fantasy Cricket Tips, NED vs NEP Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Netherlands vs Nepal

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News