ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரானது நெருங்கிவரும் சூழலில் அத்தொடரின் மீதானா எதிர்பார்ப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் இத்தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கவுள்ள நிலையில், இதில் எந்த கோப்பையை வென்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஒவ்வொரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். 

Advertisement

அந்தவகையில் ஒவ்வொரு கிரிக்கெட் வாரியங்களும் தங்கள் அணிகளை அறிவித்து வருகின்றன. அதன்படி, நேபாள் கிரிக்கெட் வாரியம் டி20 உலகக்கோப்பை தொடருக்கான அணியை அறிவித்துள்ளது. ரோஹித் பவுடல் தலைமையிலான இந்த அணியில் குஷால் புர்டெல், திபேந்திர சிங், குல்ஷன் ஷா, ஆசிஃப் சேக், கரண் கேசி, குஷால் மல்லா போன்ற வீரர்களுக்கு டி20 உலகக்கோப்பை அணியில் இடம் கிடைத்துள்ளது. 

Advertisement

நேபாள் அணி: ரோஹித் பவுடல் (கேப்டன்), ஆசிஃப் ஷேக், அனில் குமார், குஷால் புர்டெல், குஷால் மல்லா, திபேந்திர சிங் ஐரி, லலித் ராஜ்பன்ஷி, கரண் கேசி, குல்ஷன் ஷா, சோம்பால் கமி, பிரதிஸ் ஜிசி, சுந்தீப் ஜோரா, அபினாஷ் போஹாரா, சாகர் தாகல், கமல் சிங் ஐரி.

அதேபோல் ஓமன் கிரிக்கெட் வாரியமும் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடருக்கான அணியை இன்றைய தினம் அறிவித்தது. அதன்படி அகிப் இலியாஸ் தலமையிலான ஓமன் அணியில் ஸீஷன் மசூத், காஷ்யப் பிரஜபதி, அயன் கான், முகமது நசீம், பிலால் கான், கலீமுல்லா போன்ற நட்சத்திர் வீரர்களுக்கு இடம் கிடைத்துள்ளது. அதேசமயம் கூடுதல் வீரர்களில் ஜதீந்தர் சிங், சமய் ஸ்ரீவஸ்தவா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

ஓமன் அணி: ஓமன் அணி: அகிப் இலியாஸ் (கேட்ச்), ஸீஷன் மக்சூத், காஷ்யப் பிரஜாபதி, பிரதிக் அதவலே (வி.கே.), அயன் கான், சோயப் கான், முகமது நதீம், நசீம் குஷி (வாரம்), மெஹ்ரான் கான், பிலால் கான், ரஃபியுல்லா, கலீமுல்லா, ஃபயாஸ் பட், ஷகீல் அகமது.

ரிஸர்வ் வீரர்கள்: ஜதீந்தர் சிங், சமய் ஸ்ரீவஸ்தவா, சுஃப்யான் மெஹ்மூத், ஜே ஒடெட்ரா

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News