Zimbabwe T20I Tri Series: ஜிம்பாப்வே, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிரான முத்தரப்பு டி20 தொடரில் விளையாடும் நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆடம் மில்னே, பெவன் ஜேக்கப்ஸ் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

Advertisement

ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் அடுத்தாக தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான் கிரிக்கெட் தொடரை நடத்தவுள்ளது. இதில் தென் ஆப்பிரிக்க மற்றும் நியூசிலாந்து அணிகளுடன் தலா இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள ஜிம்பாப்வே அணியானது, நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுடன் இணைந்து முத்தரப்பு டி20 தொடரிலும் விளையாடவுள்ளது. 

Advertisement

இதில் ஜிம்பாப்வே அணி முதலாவதாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடரானது ஜூன் 28ஆம் தேதி தொடங்கி ஜூலை 10ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதன்பின் ஜிம்பாப்வே - தென் ஆப்பிரிக்கா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு டி20 தொடர் நடைபெறவுள்ளது. இந்த முத்தரப்பு டி20 தொடரானது ஜூலை 14ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.

மேலும் இந்த முத்தரப்பு டி20 தொடரில் விளையாடும் தென் ஆப்பிரிக்கா அணி நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த அணியின் கேப்டனாக ராஸ்ஸி வான் டெர் டுசன் தேர்வு செய்யப்பட்டுள்ளதோடு, கார்பின் போஷ், லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், ரூபின் ஹெர்மன் மற்றும் செனுரான் முத்துசாமி உள்ளிட்ட அறிமுக வீரர்களுடன் ஐபிஎல் தொடரில்  சிறப்பாக செயல்பட்ட டெவால்ட் பிரீவிஸுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த டி20 தொடருக்கான நியூசிலாந்து அணியும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. மிட்செல் சான்ட்னர் தலைமையிலான இந்த அணியில் கிளென் பிலீப்ஸ், ரச்சின் ரவீந்திரா உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளனர். முன்னதாக இவர்கள் மூவரும் பாகிஸ்தான் டி20 தொடரை தவறவிட்டிருந்தார். அதேசமயம் காயம் காரணமாக பென் சீயர்ஸ், லோக்கி ஃபெர்குசன், கைல் ஜேமிசன் ஆகியோரும் இத்தொடரில் இடம்பிடிக்காத நிலையில், கேன் வில்லியம்சனுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக பெவன் ஜேக்கப்ஸ் மற்றும் ஆடம் மில்னே ஆகியோருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும் இந்த அணியில் டிம் செஃபெர்ட், ஃபின் ஆலன், டேரில் மிட்செல், மார்க் சாப்மேன் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் தங்களது இடங்களை தக்கவைத்துள்ளனர். அதேசமயம் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடும் அணியில் இடம்பிடித்துள்ள நியூசிலாந்து வீரர்களுக்கான மாற்று வீரர்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Also Read: LIVE Cricket Score

நியூசிலாந்து டி20 அணி: மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), ஃபின் ஆலன், மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், ஜேக்கப் டஃபி, ஜாக் ஃபோல்க்ஸ், மேட் ஹென்றி, பெவன் ஜேக்கப்ஸ், ஆடம் மில்னே, டேரில் மிட்செல், வில் ஓ'ரூர்க், க்ளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, டிம் செஃபெர்ட், இஷ் சோதி

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News