பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நியூசிலாந்து அணி தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.

Advertisement

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று கராச்சியில் தொடங்கியுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கிவுள்ளது. இப்போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் நட்சத்திர வீரர் ஹசன் அலி இடம்பிடித்துள்ளார்.

Advertisement

இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கும் டெவான் கான்வே - டாம் லேதம் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்தனர். அதன்பின் 71 ரன்கள் எடுத்த நிலையில் டாம் லேதம் ஆட்டமிழக்க, மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டெவான் கான்வே சதமடித்து அசத்தினார். மேலும் இந்த ஆண்டில் பதிவுசெய்யப்பட்ட முதல் சர்வதேச சதமாகவும் இது அமைந்தது. முன்னதாக கடந்த 2022ஆம் ஆண்டிலும் முதல் சதத்தைப் பதிவுசெய்த வீரர் எனும் பெருமையையும் டெவான் கான்வே பெற்றிருந்தார்.

அதன்பின் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய டெவான் கான்வே 122 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த கேன் வில்லியம்சன் 36 ரன்களிலும், ஹென்றி நிக்கோலஸ் 26 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். பின்னர் டேரில் மிட்செல் 3, மைக்கேல் பிரேஸ்வெல் ரன் ஏதுமின்றியும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதில் 234 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்திருந்த நியூசிலாந்து அணி, அடுத்த 45 ரன்களுக்குள்ளாக 6 விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் ஜோடி சேர்ந்த டாம் பிளெண்டல் - இஷ் சோதி இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர். 

இதன்மூலம் முதல்நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 309 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் டாம் பிளெண்டல் 30 ரன்களுடனும், இஷ் சோதி 11 ரன்களுடனும் இன்னிங்ஸைத் தொடர்ந்தனர். இதில் பிளெண்டல் அரைசதம் கடக்க, இஷ் சோதி 11 ரன்களோடு வெளியேறினார்.

பின் 51 ரன்களைச் சேர்த்த பிளெண்டலும் ஆட்டமிழக்க, 345 ரன்களுக்கே நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் ஜோடி சேர்ந்த மேட் ஹென்றி - அஜாஸ் படேல் இணை அபாரமான ஆட்டத்த வெளிப்படுத்தி பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை திணரவைத்தனர். இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய மேட் ஹென்றி அரைசதம் கடந்து அசத்தினார். 

Advertisement

பின்னர் இருவரும் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பையும் அமைத்தனர்.இறுதியில் அஜாஸ் படேல் 35 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இதனால் நியூசிலாந்து அணி 449 ரன்காளுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் தரப்பில் அப்ரார் அஹ்மத் 4 விக்கெட்டுகளையும், அகா சல்மான், நசீம் ஷா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News