ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற 16ஆவது லீக் போட்டியில் நியூசிலாந்து மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

Advertisement

அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு டெவான் கான்வே - வில் யங் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் வில் யங் ஒரு ரன்னில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை ரஹ்மத் ஷா தவறவிட்டார். அதேசமயம் மறுப்பக்கம் 20 ரன்களை எடுத்திருந்த டெவான் கான்வேவின் விக்கெட்டை முஜீப் உர் ரஹ்மான் வீழ்த்தி அவரை வழியனுப்பிவைத்தார். 

Advertisement

அதேசமயம் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய வில் யங் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் 32 ரன்களை எடுத்திருந்த ரச்சின் ரவீந்திரா, மறுபக்கம் 4 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 54 ரன்கள் எடுத்திருந்த வில் யங் ஆகியோரது விக்கெட்டுகளை அஸ்மதுல்லா ஒமர்ஸாய் கைப்பற்றி அசத்த, அடுத்து களமிறங்கிய டெரில் மிட்செல் ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.

இதனால் நியூசிலாந்து அணி 110 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் டாம் லேதம் மற்றும் கிளென் பிலீப்ஸ் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட்டை இழப்பை தடுத்தனர். இருப்பினு அவர்கள் இருவரும் கொடுத்த கேட்ச் வாய்ப்பை ஆஃப்கானிஸ்தன் வீரர்கள் அடுத்தடுத்து தவறவிட்டனர்.

இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கிளென் பிலீப்ஸ் தனது அரைசதத்தைப் பதிவு செய்ய, அவரைத்தொடர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் டாம் லேதமும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அதன்பின் அதிரடியாக விளையாடி வந்த கிளென் பிலீப்ஸ் 4 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 71 ரன்கள் எடுத்த நிலயில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து கேப்டன் டாம் லேதமும் 3 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 68 ரன்களை எடுத்த நிலையில் அதே ஓவரில் விக்கெட்டை இழந்தார்.

இறுதியில் மார்க் சாப்மேன் தனது பங்கிற்கு 2 பவுண்டரி, ஒரு சிக்சர் என 25 ரன்களைச் சேர்க்க, நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்களைச் சேர்த்தது. ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் நவீன் உல் ஹக், அஸ்மதுல்லா ஒமர்ஸாய் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

Advertisement

இதையடுத்து இலக்கி நோக்கி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. நட்சத்திர வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் 11 ரன்களுக்கும், இப்ராஹிம் ஸத்ரான் 14 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் களமிறகிய ரஹ்மத் ஷா - ஹஸ்மதுல்லா ஷாஹிதி இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இதில் ஷாஹிதி 8 ரன்களுக்கும், அடுத்து களம்றங்கிய அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 27 ரன்களுக்கும், அதுவரை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஹ்மத் ஷா 36 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்தனர்.  இதையடுத்து களமிறங்கிய இக்ரம் அலிகில் ஒருபக்கம் நிதான ஆடத்தை வெளிப்படுத்த மறுபக்கம் களமிறங்கிய முகமது நபி, ரஷிட் கான், முஜீப் உர் ரஹ்மான், நவீன் உல் ஹக், ஃபசல்ஹக் ஃபருக்கி ஆகியோரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இதனால் ஆஃப்கானிஸ்தான் அணி 34.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 139 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நியூசிலாந்து அணி தரப்பில் மிட்செல் சாண்ட்னர், லோக்கி ஃபர்குசன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதன்மூலம் நியூசிலாந்து அணி 149 ரன்கள் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.  

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News