நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 5ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று டுனேடினில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் அலிக் அதனேஸ் ஒரு ரன்னிலும், அகீம் அகஸ்டே 8 ரன்னிலும், கேப்டன் ஷாய் ஹோப் 11 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். 

Advertisement

அதன்பின் களமிறங்கிய ரோஸ்டன் சேஸ் ஒருபக்கம் சிறப்பாக விளையாடிய நிலையில், மறுமுனையில் விளையாடியா ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், ரோவ்மன் பாவெல் மற்றும் ஜேசன் ஹோல்டர் ஆகியோரும் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்தனர். மேற்கொண்டு அரைசதம் அடிப்பார் என்று அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோஸ்டன் சேஸும் 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 38 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

Advertisement

இறுதியில் அதிரடியாக விளையாடியா ரொமாரியோ ஷெஃபெர்ட் 36 ரன்களைச் சேர்த்ததை தவிர மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 140 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நியூசிலாந்து தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜேக்கப் டஃபி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணிக்கு டிம் ராபின்சன் மற்றும் டெவான் கான்வே இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் அரைசதத்தை நெருங்கிய டிம் ராபின்சன் 5 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 45 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ரச்சின் ரவீந்திரா 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் என 21 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். 

Also Read: LIVE Cricket Score

இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டெவான் கான்வே 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 47 ரன்களையும், மார்க் சாப்மேன் 2 சிக்ஸர்களுடன் 21 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன் மூலம் நியூசிலாந்து அணி 15.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி வெற்றி பெற்றதுடன், 3-1 என்ற கணக்கில் தொடரையும் வென்று அசத்தியது.

About the Author

Tamil Editorial
Tamil Editorial Read More
Latest Cricket News